Published : 30 Mar 2020 12:05 PM
Last Updated : 30 Mar 2020 12:05 PM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் வீடியோ கால் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 30) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் வீடியோ கால் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இது தொடர்பான வீடியோ பதிவை, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களையும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அந்தந்தப் பகுதிகளின் பிரச்சினைகளையும் அவர் கேட்டறிந்தார். துப்புரவுப் பணியாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை கட்சியினர் செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், மாநில எல்லைப் பகுதிகளில் சோதனை, வீடு வீடாக வந்து சோதனைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனையும் அவர் மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக, ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம்! மக்கள் செயலாளர்களாக செயல்பட மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை கூறினேன்! கரோனா காலத்தில் திமுக சட்டப்பேரவை/ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT