Published : 30 Mar 2020 07:49 AM
Last Updated : 30 Mar 2020 07:49 AM
கரோனா பீதியால் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே தலைகாட்டாத இந்த சூழலில், அதிகாலையில் புறப்பட்டு நம் வீடுதேடிவந்து நாளிதழ் போடுகிறார்கள் பத்திரிகை முகவர்களும், பையன்களும். அவர்களது இன்றைய மனநிலை எப்படி இருக்கிறது? சொல்கிறார்... சென்னை முகவர் ரஞ்சிதவள்ளி ராஜேஷ்.
‘‘2008-ல இருந்து ஏஜென்ட்டாஇருக்கேன். நானும், கணவரும் தினமும் அதிகாலை மூணே காலுக்கே எழுந்து, 4 மணிக்கு பிக்அப் பாயின்ட்டுக்கு போயிடுவோம். பேப்பர் வந்திடுச்சின்னு உறுதி செஞ்சாத்தான் அன்றையநாள் நல்லபடியாவிடிஞ்சதா நினைப்போம். காலைல 7.30 மணி வரை வேலை இருக்குங்கிறதால, ரெண்டு பிள்ளைங்களையும் கும்பகோணத்துல அம்மா வீட்ல விட்டுத்தான் படிக்க வெக்கிறேன்.சென்னை வெள்ளத்துக்கு அப்புறமா, இந்த சீசன்தான் எங்களுக்கு ரொம்ப கஷ்டமான காலம். ஆனா, கெட்டதுலேயும் ஒரு நல்லது இருக்குன்னு சொல்ற மாதிரி, இந்த நேரத்துலதான் எங்களோட சேவையை நிறைய பேரு மனசார பாராட்டுறாங்க.
‘‘நாங்க கதவைத் திறக்கவே பயப்படுறோம், நீங்க தெருத் தெருவா வந்து பேப்பர் போடுறீங்களே தம்பி’’ என்று நிறைய பேர் பாராட்டியதாக டெலிவரி பையன்கள் சந்தோஷமாக வந்து சொல்றாங்க. அத்தனை பேரும் கையில் கிளவுஸ் மாட்டி, முகத்தில் மாஸ்க் கட்டி, பேப்பரில் சானிடைஸர் தெளித்துத்தான் கொடுக்கிறோம். ஒரு டீச்சரை பார்த்தேன். ‘‘இதுநாள் வரை ‘இந்து தமிழ்’ இணைப்பிதழ்களைப் படிக்க நேரமில்லாம சேர்த்துச் சேர்த்து வெச்சிருந்தேன். இப்பதான் எல்லாத்தையும் படிக்க நேரம் கெடைச்சிருக்கு. உண்மையிலேயே சூப்பர்ங்க. தினம் தினம்அறிவைச் சுமந்து வந்து தந்திருக்கீங்க’’ன்னு பாராட்டுனாங்க. போன்போட்டா குடும்பத்தைப் பத்தி எல்லாம் விசாரிக்கிறாங்க.
ஒரு விஷயத்துல தெளிவாஇருக்கேன். பத்திரிகை முகவர்என்பதுதான் என் தொழில். வாசகர்கள்தான் என் தெய்வம் இதுகஷ்ட காலம்தான், ஆனாலும்அதை வெற்றிகரமாக கடந்தா கணும். நிச்சயம் கடப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு. அதுக்கு வாசகர்களே அவ்வளவு ஊக்கம் தர்றப்ப வேற என்ன வேணும், சொல்லுங்க!”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT