Published : 30 Mar 2020 07:32 AM
Last Updated : 30 Mar 2020 07:32 AM

திருச்சியில் கரோனா வார்டில் சிகிச்சை பெறுவோருக்கு ரோபோ மூலம் உணவு அளிக்க திட்டம்

திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையில் பயன்படுத்தப்படவுள்ள ரோபோ செயல் விளக்கத்தை நேற்று பார்வையிடும் ஆட்சியர் சு.சிவராசு. படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி/ கரூர்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரோபோ மூலம் உணவு வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம், தாங்கள் தயாரித்துள்ள ரோபோ-க்களை பயன்படுத்தி அரசு மருத்துவ மனையில் கரோனா தனி வார்டில் உள்ளவர்களுக்கு மூலம் உணவு, மருந்துகளை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

அதைத்தொடர்ந்து, அந்த ரோபோ-க்களின் செயல்பாடுகள், பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவுக்கு அந்நிறுவ னத்தினர் செயல்விளக்கம் அளித் தனர்.

அதைப் பார்வையிட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை யில் கரோனா வார்டில் உள்ளவர் களுக்கு உணவு வழங்க 10 ரோபோ-க்களை பயன்படுத்த அனுமதி அளித்தார்.

கரோனா வார்டில் 5 பேர்...

திருச்சி அரசு மருத்துவனை கரோனா தனி வார்டில் நேற்று முன்தினம் வரை 11 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், 6 பேருக்கு கரோனா தொற்று இல்லை என நேற்று தெரியவந்ததையடுத்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞர் உட்பட 5 பேர் தற்போது சிகிச்சை யில் உள்ளனர்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சில்லறை வியாபாரிகளால் இன்று முதல் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ள இடங்களில் முன்னேற்பாடுகளை நேற்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, “மதியம் 2.30 மணி வரை செயல்படும் இக்கடைகளுக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சமூக விலகலை முறையாக கடைபிடிப் பதுடன், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

இந்த உத்தரவை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x