Last Updated : 29 Mar, 2020 11:59 AM

 

Published : 29 Mar 2020 11:59 AM
Last Updated : 29 Mar 2020 11:59 AM

கரோனா பரவ வாய்ப்பிருப்பதால் ஊரடங்கு காலத்தில் தபால் அலுவலகங்களை மூட வேண்டும்: மத்திய அரசுக்கு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள்

மதுரை

கரோனா பரவ வாய்ப்பிருப்பதால் ஊரடங்கு காலத்தில் தபால் அலுவலங்களை மூட வேண்டும் என மத்திய அரசுக்கு தபால் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய தபால் ஊழியர் சங்கம் அஞ்சல் 3-ன் தென் மண்டல செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

கரோனா ஊரடங்கு உத்தரவால் பல்வேறு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தபால் அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் தபால் அலுவலகங்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இதனால் சமூக விலகல் கேள்விக்குறியாகியுள்ளது. ஊழியர்கள் பெரும் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.

ரயில் சேவை, பஸ் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதால் கடித போக்குவரத்து முடங்கியுள்ளது. தபால் அலுவலக வங்கி கணக்குகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். ஆதார் கார்டு பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஊரடங்கு காலத்தில் தபால் அலுவலகங்களை திறப்பதை தவிர்க்கலாம். தபால் அலுவலகங்கள் திறப்பதால் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே ஊரடங்கு காலத்தில் தபால் அலுவலகங்களை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x