Last Updated : 28 Mar, 2020 10:17 AM

 

Published : 28 Mar 2020 10:17 AM
Last Updated : 28 Mar 2020 10:17 AM

அத்தியாவசியப் பணிக்குச் செல்வோரிடம் கடுமை காட்டவேண்டாம்: போலீஸாருக்கு மதுரை காவல் ஆணையர் அறிவுரை

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை முழுமையாக மக்கள் கடைபிடிக்கும் வகையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் வெளியில் வருவதைத் தடுக்க, மதுரை நகரில் போலீஸார் பகல், இரவு என சுழற்சி முறையில் முகக்கவசம் அணிந்து பணிபுரிகின்றனர். அத்தியாவசிய தேவைக்கு செல்வோர் தவிர, எஞ்சியவர்களுக்குத் தகுந்த அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்புகின்றனர்.

தேவையின்றி இருச்சக்கர வாகனங்களில் சுற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அபராதம் விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணி என்ற பெயரில் சிலர் வாகனங்களில் செல்வதை தவிர்க்கவே, அத்தியாவசிய பணியாளர்களிடம் அடையாள அட்டை கேட்கும் சூழல் போலீஸாருக்கு ஏற்படுகிறது.

இந்நிலையில் மாட்டுத்தாவணி பகுதியில் நேற்று முன்தினம் மேலூர் பகுதிக்கு அரசு மருத்துவமனை பணிக்கு செவலியர்கள் சென்ற ஆட்டோ ஒன்றுக்கு போலீஸார் அபராதம் விதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான தகவல் காவல் ஆணையரின் கவனத்துச் சென்றது. அது உண்மையான என, சம்பந்தப்பட்ட காவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இருப்பினும், மதுரை நகரில் அத்தியாவசியப் பணிக்குச் செல்வோரிடம் மென்மையாக நடந்து கொள்ளவேண்டும். கடுமை காட்டக்கூடாது. அடையாள அட்டைகளை காண்பித்தால் அவர்களை உடனே அனுப்பி வைக்கவேண்டும். தேவையின்றி வாகனங்களில் சுற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ஆணையர் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் போலீஸார் தொடர் பணியால் மதுரை நகரில் தேவையின்றி வெளியில் வரும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முக்கியத்துவமும் மக்களுக்கு உணர்த்தப்படுகிறது.

அத்தியாவசியத் தேவையான பால், காய்கறி, பலசரக்குக் கடை வியாபாரிகளை அழைத்து பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கப்பட்டது. அவர்களிடம் தங்களது கடைகளில் கூட்டம் கூடாமல் பார்க்க வேண்டும்.

அடுர்கடைகளில் சுமார் 1 மீட்டர் இடைவெளிவிட்டு பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்களை வலியுறுத்தவேண்டும். முகக்கவசம் அணியவேண்டும். முடிந்தவரை அத்தியாவசியத் தேவை இருப்போருக்கு வீடுகளுக்கே சென்று, பொருட்களை விநியோகிக்கலாம் என, வியாபாரிகளிடம் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும், அத்தியாவசியத் தேவைக்கு உதவும் வகையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றும் திறக்கப்பட்டு, நேற்று முதல் பொது மக்களின் அத்தியாவசிய தேவையை காவல்துறையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இது போன்ற மதுரை நகர் போலீஸாரின் தொடர் நடவடிக்கையை பொது மக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x