Published : 27 Mar 2020 07:51 AM
Last Updated : 27 Mar 2020 07:51 AM

அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டிருந்த போதும் வாடிக்கையாளர் இன்றி வெறிச்சோடிய வங்கிகள்

மதுரையில் வாடிக்ககையாளர் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட மேலமாரட் வீதியிலுள்ள கனரா வங்கி. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

ஊரடங்கு உத்தரவுக்குப் பின் நேற்று செயல்பட்ட வங்கிகள், வாடிக்கையாளர் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ஊரடங்கு உத்தரவையடுத்து வங்கிகள் வேலைநேரம் 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. இதனால் ஊரடங்குக்குப் பின் நேற்றுதான் வங்கிகள் திறக்கப்பட்டன. பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. 50% பணியாளர்களே வந்திருந்தனர். வாடிக்கையாளர் கூட்டம் குறைவாகவே இருந்தது. அரசு அலுவல்கள் சார்ந்த பணிகள் மட்டுமே நடந்தன. வாடிக்கையாளர்கள் பெயர், கணக்கு, போன் எண் உள்ளிட்ட விபரங்களை பெற்ற பின்னரே வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து வங்கி அலுவ லர்கள் கூறுகையில், ‘கடைகள் திறக்கப்படாததால் வர்த்தகர்கள் பணம் செலுத்த வரவில்லை. நகைக்கடன் உள்ளிட்ட எந்த கடனும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்துக்கு தடை இருப்பதால் சேமிப்பு கணக்கு வைத்துள்ளோரும் வரவில்லை. வங்கிக்கு அருகே வசிப்போர் மட்டுமே நடந்தே வந்து சென்றனர். இதனால் வழக்கமான பணியில் 10% கூட நடக்கவில்லை. எனினும் ஆன்லைன் மற்றும் கணினி சார்ந்த பணிகள் நடந்தன. இதே சூழல்தான் ஊரடங்கு முடியும்வரை இருக்கும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x