Published : 25 Mar 2020 06:31 PM
Last Updated : 25 Mar 2020 06:31 PM
மதுரை மாநகராட்சி சார்பில் சமுதாய சமையல் கூடம் அமைத்து மூன்று வேளைக்கும் உணவு சமைத்து ஆதரவற்றவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
‘கரோனா’ வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அடுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதை மீறுவோர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குரிய உரிய நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் தற்போது விளாங்குடி சொக்கநாதபுரம் 2-வது தெரு சமுதாய கூடத்திலும், பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபத்திலும், கே.புதூர் ராமவர்மா நகர் சமுதாய கூடத்திலும், கீரைத்துறை ராணிபொன்னம்மாள் சாலையில் உள்ள முதியோர் இல்லத்திலும், ஹார்விப்பட்டி சமுதாய கூடத்திலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக மதுரை மாநகராட்சியின் சார்பில் பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் உள்ள சமுதாய சமையல் கூடத்தில் ஒரு வேளைக்கு சுமார் 600 நபர்களுக்குஉணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாநகராட்சியின் 12 அம்மா உணவகங்களிலும் காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேளையும் சிறந்த முறையில் உணவு தயாரிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சி அருள்மிகு பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் 60 நபர்களும், ஹார்விப்பட்டியில் 28 நபர்களும் தங்கவைக்கப்பட்டுள்ளதை இன்று மாநகராட்சி ஆணையாளர் விசாகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT