Published : 25 Mar 2020 12:50 PM
Last Updated : 25 Mar 2020 12:50 PM

கரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.56 லட்சம் ஒதுக்கீடு: மதுரை எம்.பி. அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் ‘கரோனா’ மருத்துவ உபகணரணங்கள் வாங்குவதற்கு எம்.பி.கள் தாராளமாக நிதியை வழங்க மத்திய அரசு நிதி பயன்பாடு விதிகளை தளர்த்தி நேற்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்திலே முதல் முறையாக மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதுரை அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.55.17 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

மக்களவை எம்.பி.gகளுக்கு ஆண்டுதோறும் அவரவர் தொகுதிகளுக்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள ரூ. 5 கோடி வரை மத்திய அரசு நிதி ஒதுக்கும். எம்பி-க்கள், இந்த நிதியை தங்கள் தொகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், எந்த ஒரு நிறுவனத்திற்கும் அதிகப்பட்சம் ரூ.50 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய முடியும், எந்த ஒரு உபகரணங்கள் வாங்குவதற்கும் அதன் மொத்த செலவினத்தில் 10 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் போன்ற நிதி பயன்பாடு கட்டுப்பாடுகளை எம்பிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் ‘கரோனா’ வைரஸ் தொற்று நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று முதல் முறையாக மதுரையில் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளார். தற்போது வரை இந்த நோய்க்கு ஒரிரு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் ‘கரோனா’ அறிகுறி மற்றும் அதன் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய உபகரணங்களும், பாதுகாப்பு பொருட்களும் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்கு முககவசங்கள் கூட கிடைப்பதில்லை.மருத்துவர்களுக்கு மட்டும் முகgகவசம் வழங்கப்படுகிறது. மற்ற பணியாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். அதுபோல், இந்த நோய் சிகிச்சைக்கு அனுமதிக்க போதிய மருத்துவ உபகரணங்களும் பற்றாக்குறையகாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

அதனால், மத்திய அரசு நேற்று மாலை எம்பிகள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மொத்த நிதியையும் வழங்குவதற்கு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடு கட்டுப்பாடு விதிகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வெளியிடப்பட்ட மறுநாளே நேற்று தமிழகத்திலே முதல் முறையாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் எம்பி, நேற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனையில் ‘கரோனா’ தொற்று நோய் தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.60 லட்சம் ஒதுக்கிடு செய்தார்.

இந்த நிதியை கொண்டு நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் 3 வெண்டிலேட்டர், மல்டி பாரா மானிட்டர், என்ஐவி மிஷின், இன்பஷன் பம்ப், என்-95 மாஸ்க், ஆக்ஸிஜன் சிலிண்டர், நெபுலேசர் உள்ளிட்ட 17 மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக ‘டீன்’ சங்குமணி ஏற்பாடு செய்தார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், ‘‘கட்டிடங்கள் கட்டுவதற்கு முழுமையான நிதியை ஒதுக்கீடு செய்ய எம்பிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு அதன் மொத்த விதி மதிப்பீட்டில் 10 சதவீதம் மட்டுமே வழங்க முடியும்.

‘கரோனா’ நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், இதர பணிணயாளர்களுக்கு முழு பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம். இதில், என்95 மாஸ்க் மிக பற்றாக்குறையாக உள்ளது. அந்த மாஸ்க் மட்டும் ஆயிரம் எண்ணிக்கையில் வாங்குவதற்கு நிதிவழங்கியுள்ளேன். தொடர்ந்து அடுத்தக்கட்டமாக இன்னும் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் தேவையோ அதை வாங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறேன், ’’ என்றார்.

முன்னதாக நேற்று, மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து கடன்கள் மீதான மாதத் தவணைகளை (இ. எம்.ஐ) கட்டுவதற்கு மூன்று மாத விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் இக் கடன்கள் செயல்படா சொத்துக்களாக கருதப்படுவதையும், கடன் தவணை செலுத்தத் தவறியோராக "சிபில்" அறிக்கையில் இடம் பெறுவதையும் தவிர்க்குமாறும் எம்.பி., வேண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x