Last Updated : 25 Mar, 2020 11:01 AM

 

Published : 25 Mar 2020 11:01 AM
Last Updated : 25 Mar 2020 11:01 AM

தென்காசி குத்துக்கல்வலசை நபர் உட்பட 3 பேருக்கு கரோனா இல்லை: நெல்லை அரசு மருத்துவமனை உறுதி

தென்காசி குத்துக்கல்வலசை நபர் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை என நெல்லை அரசு மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

நேற்று முன் தினம் (திங்கள்கிழமை) வெளிநாடுகளில் இருந்து வந்த தென்காசி குத்துக்கல்வலசை சேர்ந்த நபர் ஒருவர், தியாகராஜ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஊர் திரும்பிய பெண் ஒருவர் என மூன்று பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் மூவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மூவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா பரிசோதனை எப்படி நடக்கிறது?

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனை முடிவு நான்கரை மணிநேரத்தில் வெளியாகிவிடுகிறது.

சோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்று உறுதியான நபர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர். ஒருவேளை சோதனையில் பாசிட்டிவ் என்று வந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுவரை நெல்லை அரசு மருத்துவமனையில் ராதாபுரம் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது.

மற்றபடி திங்கட்கிழமை கரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் அதன் பின்னர் நேற்று அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனை நெல்லை அரசு மருத்துவமனை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x