Published : 09 Aug 2015 10:28 AM
Last Updated : 09 Aug 2015 10:28 AM
திருவள்ளூர் மாவட்டம் மப்பேட் டில் ரூ.300 கோடி செலவில் அமைக் கப்பட இருந்த ராஜீவ்காந்தி உலர் துறைமுகம் திட்டத்துக்கு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் அது கைவிடப் பட்டது. இதற்காக குத்தகையாக பெறப்பட்ட நிலமும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் சரக்கு களை கையாளும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை யொட்டி துறை முகத்துக்கு வரும் கன்டெய்னர் லாரிகளால் சென்னை துறை முகத்துக்கு உள்ளேயும், வெளியே யும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை குறைக்கவும், எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை கருத்தில் கொண்டும் திருவள்ளூர் மாவட் டம், மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 'ராஜீவ் காந்தி உலர் துறைமுகம்' அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச் சகம் முடிவெடுத்தது. இதற்கான அறிவிப்பு கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
கப்பலில் வரும் சரக்குகளை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சென்று வைத்து அங்கிருந்து பிற பகுதிகளுக்கு அனுப்ப பயன்படும் இடம் ‘உலர் துறைமுகம்’ எனப் படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள ஆட்டோ மொபைல் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு எளிதான சரக்குப் போக்குவரத்து சேவை அளிப்பதை கருத்தில் கொண்டும் இத்துறைமுகத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, மப்பேடு கிராமத்தில் 'சிப்காட்' வசமிருந்த 125.17 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு ரூ.100.13 கோடி கொடுத்து 2010 செப்டம்பரில் சென்னை துறைமுகம் கையகப்படுத்தியது.பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.300 கோடி செலவில், 7 கோடி டன் சரக்குகளை கையாளும் திறனு டன் இந்த உலர் துறைமுகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.
மேலும், சென்னை துறைமுகத் தில் இருந்து உலர் துறைமுகத்துக்கு ரயில் பாதை, போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் திட்டங் கள் வகுக்கப்பட்டு மாநில அரசின் உதவி கோரப்பட்டது. இந்நிலை யில், தனியார் நிறுவனங்கள் இத்துறைமுகத்தை அமைக்க ஆர்வம் காட்டவில்லை. முறை யான சாலை மற்றும் ரயில் போக்கு வரத்து வசதி இல்லாததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, துறைமுக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: மப்பேட்டில் சர்வதேச தரத்தில் உலர் துறைமுகம் அமைக்க சென்னை துறை முகம் திட்டமிட்டது. தனியார் பங்களிப்புடன் இதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை.
மதுரவாயலிலிருந்து- சென்னை துறைமுகத்தை இணைக்க தொடங்கப்பட்ட சாலைப் பணியும் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதனால், மப்பேட்டில் உலர் துறைமுகம் அமைத்தாலும் அங்கிருந்து துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு உலர் துறை முகம் அமைக்கும் முடிவு கைவிடப் பட்டுள்ளது. இதற்காக கையகப் படுத்தப்பட்ட நிலம் சிப்காட்’டிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT