Published : 23 Mar 2020 08:50 PM
Last Updated : 23 Mar 2020 08:50 PM
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறைக்கு 22 வழிகாட்டுதல்களை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். அதில் இனிவரும் காலங்களில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும், தமிழக அரசு தொற்று ஏற்படாமல் எடுத்துவரும் முன்னேச்சரிக்கை அனைவரும் அறிவோம். காவல்துறைச் சேர்ந்த நமக்கு இதுபோன்ற நேரங்களில் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை பேணுவதும், மக்களிடையே அமைதியான சூழலை உருவாக்கும் கடமை உள்ளது.
தமிழக முதல்வர் கோவிட் 19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிகாட்டுதல்களை அளித்துள்ளார். அதை அடிப்படையாகக் கொண்டு கீழ்வரும் நடவடிக்கைகளை தமிழக காவல்துறை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
* அனைத்து வருகையாளர்கள்/ புகார்தாரர்கள் அனைவரும் தெர்மல் சோதனைக்கு பின்னரே காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
* காவல் நிலையம், அலுவலகம் அனைத்து வாயில்களிலும் சனிடைசர் மற்றும் கைகழுவும் கிருமிநாசினி போன்றவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கைகளை சுத்தமாக பராமரிக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வருகையாளர்கள்/ புகார்தாரர்களுக்காக காற்றோட்டம் மிகுந்த தனி அறையை ஒதுக்கி அங்கேயே அவர்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து அனுப்பவேண்டும். அந்த அறை ஏசி அறைகளாக இருக்கக்கூடாது.
* வருகைதாரர்கள்/ புகார்த்தாரர்கள் தும்மல், இருமல், சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது.
* அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் டேபிள், சேர்கள், கம்ப்யூட்டர், கீபோர்ட், டெலிபோன், கதவு கைப்பிடிகள், சாவிகள் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி கிருமிகள் இல்லாத நிலையில் சுத்தப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படவேண்டும்.
* காவல் துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் முறையான கால இடைவெளியில் கிருமி தொற்றுகள் இல்லாத வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும்.
* அவசரமான தேவையிருக்கும் பட்சத்தைத்தவிர கூட்டங்கல், அலுவல் கூட்டம் நடத்துவதை தவித்திட வேண்டும்.
* அனைத்து அலுவலக பணிகளும் மின்னஞ்சல் பணிகளாக மாற்றிட வேண்டும், இ.மெயில் மூலம் கடித தொடர்புகள் நடத்தவும். கோப்புகள், பைல்களை கூடியவரை தவிர்க்கவும்.
* தபால்கள், கோப்புகள், வெளியிலிருந்து வரும் கடிதங்களை அலுவலகத்திற்குள் சேமிக்க வேண்டாம்.
* மாநகராட்சி, நகராட்சி சுகாதாரத்துறையினருடன் இணைந்து பணி புரியும் இடங்கள், வாகனங்களை கிருமி நாசினிகள் மூலம் பராமரிக்க வேண்டும்.
* பொதுவான வேலை நடக்கும் இடங்கள் கழிவரைகள், கைகழுவும் இடங்கள் உள்ளிட்ட இடங்களில் சனிடைசர் ,கைகழுவும் கிருமிநாசினி வைத்திருக்கவேண்டும்.
* விழிப்புணர்வு போஸ்டர்கள் கை கழுவுவது சுத்தத்தைப் பராமரிப்பது உள்ளிட்ட பலர் விஷயங்களுக்கான விழிப்பு போஸ்டர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அனைத்து காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அனைத்து போலீசாரும் அவரவர் இருமும் போதும், தும்மும்போதும் கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பரை கொண்டு முகத்தை மூடிக்கொண்டு தும்ம வேண்டும் அல்லது தங்களுடைய முழங்கையில் முகத்தைப் புதைத்து தும்ம வேண்டும்.
* உணவருந்தும் நேரம் கூடும் நிலை ஏற்பட்டால் கும்பலாக கூடாமல் இடைவெளிவிட்டு அமரவேண்டும், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் சுத்தமாக பேணப்படவேண்டும். உணவருந்தும் இடமும் சுகாதாரத்துடன் இருக்கவேண்டும்.
* பாய்ஸ் கிளப், உடற்பயிற்சிக்கூடங்கள், விளையாட்டு திடல்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படுகிறது.
* சமுதாய நலக்கூடங்கள்/திருமண மண்டபங்கள் அனைத்தும் மூடப்படுகிறது. கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
* போலீஸ் மருத்துவமனைகள் அரசு சுகாதாரத்துறை வழிகாட்டுதல் அடிப்படையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவர்கள் , அவசர சிகிச்சை பிரிவினர், ஊழியர்கள் அனைவரும் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலை குறித்த அரசின், சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வுடன் மருத்துவத்துறையினர் இருக்கவேண்டும்.
* அனைத்து அலுவலர்களுக்கு அரசின் ஹெல்ப்லைன் குறித்த விழிப்புணர்வு இருக்கவேண்டும் அனைத்து காவல் நிலையங்களிலும் ஹெல்ப்லைன் எண்கள் இருக்க வேண்டும், IO4, 044-29510400/S0O,044-24300300, 1800120555550, 8754448477, 044-46274446 இந்த எங்கள் மாநில மாஸ்டர் கண்ட்ரோல் ரூம் உடன் இணைக்கப்பட்டு 24/7 மணி நேரமும் இயங்கும் எண்கள் ஆகும்.
* மாவட்ட மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பால் யாராவது அனுமதிக்கப்பட்டால் அதுகுறித்து செய்ய வேண்டிய ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிலைய மருத்துவ அதிகாரிகளுடன் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும்.
*கரோனா நோய் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் அதனால் எழும் பிரச்சினைகள் எடுக்கப்ப்டவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அநந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை சுகாதாரத்துறை அலுவலர்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் அதிகாரிகள் இணைந்து பேசி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
* அனைத்து காவலரும் தங்களுடைய பணி முடிந்தபின் தங்கள் உடைகளை களைந்து அதை சுத்தப்படுத்த வேண்டும், நுண்ணுயிர் தொற்று இல்லாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
* அனைத்து காவல் வாகனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நுண்ணுயிர் தொற்று இல்லாமல் இருப்பதற்கான பராமரிப்பு செய்யப்படவேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டுதல்களை அனைத்து அலுவலர்களும், அவரவர்கள் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ளவர்களும் அவரது குடும்பத்தாரும் கடைபிடிக்கவேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள், செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்த முழுமையான அறிக்கையை தலைமை அலுவலகத்தில் இன்று (23/3)தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். இந்த
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT