Published : 23 Mar 2020 08:37 PM
Last Updated : 23 Mar 2020 08:37 PM

மார்ச்- 31 வரை ஏழைகளுக்கு   இலவச உணவு: காஞ்சி பெரியவர் அறிவுரைப்படி  தர்ம ஸம்ரக்ஷண சமிதி நடவடிக்கை

புதுச்சேரி

காஞ்சி பெரியவர் அறிவுரைப்படி ஊரடங்கு உத்தரவால் வரும் 31 வரை ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் பணியை புதுச்சேரியில் தொடங்கியதுள்ளது தர்ம ஸம்ரக்ஷண சமிதி (தர்மத்தை போற்றி பாதுகாக்கும் அமைப்பு).

கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் வரும் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. இதனால் சாலையோரம் வசிப்போர், மருத்துவமனையில் சிகிச்சை வந்திருப்போர் என பலருக்கும் உணவு கிடைப்பது சிரமமாகியுள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு உதவும் பணியை தொடங்கியுள்ளது தொடர்பாக தர்ம ஸம்ரக்ஷண சமிதி (தர்மத்தை போற்றி பாதுகாக்கும் அமைப்பு) செயலர் சீதாராமன் கூறுகையில், "தர்ம சிந்தனையை வளர்க்கவும் சக ஏழை சகோதரர்களின் பசி போக்கவும் காஞ்சி பெரியவரின் அறிவுரைப்படி நடத்தப்படும் அமைப்பு இது.

பிடி அரிசி திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட அரிசியில், கரோனா வைரஸ் பிரச்சினை மூலம் உணவின்றி அவதிப்படுவோருக்காக, "தர்ம ஸம்ரக்ஷண சமிதி" தலைவர் ஸ்ரீநிவாசன் தலைமையில் இன்று முதல் தினமும் புதுச்சேரியில் குருப்பிட்ட இடத்தில் அன்னதானம் செய்வதாய் முடிவு செய்துள்ளோம்.

இந்த அன்னதானம் மார்ச் 31-ம் தேதி வரை தொடரும்.ஒவ்வொரு பகுதியிலும் வாழுகின்ற ஏழைகளுக்கு இலவச உணவு அளிக்க முயற்சிக்கிறோம்." என்று குறிப்பிட்டார். இதுதொடர்பாக தொடர்பு கொள்ள விரும்புவோர் சீதாராமனை 98945 75170 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x