Published : 21 Mar 2020 01:36 PM
Last Updated : 21 Mar 2020 01:36 PM

நாளை ஊரடங்கு; ஆதரவற்றோர் 51 மாநகராட்சி காப்பகங்களில் தங்கலாம்: பட்டியல் வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர் 

மக்கள் ஊரடங்கு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் மாநகராட்சி காப்பகங்களில் தங்கிக் கொள்ளலாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் எடுத்து வருகின்றன. தமிழகத்தில் பிரதமர் வேண்டுகோளை ஏற்று மக்கள் ஊரடங்கு நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்குபெற உள்ளனர்.

இந்நிலையில், வீடற்றோர், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள், சிறுவர், சிறுமிகள் நாளை ஒருநாள் தங்குவதற்கு சென்னையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 51 காப்பகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான செல்போன் எண்களையும் மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு வருமாறு:

“பெருநகர சென்னை மாநகராட்சியில் 38 காப்பகங்கள், 13 சிறப்பு காப்பகங்கள் என மொத்தம் 51 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிரதமர் வருகின்ற 22/03 (நாளை) அன்று பொதுமக்கள் தாங்களாகவே ஊரடங்கு உத்தரவு (Janata Curfew) மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி, அன்றையதினம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர்கள், மாநகராட்சியின் கீழ்கண்ட இடங்களில் உள்ள 51 காப்பகங்களில் தங்கி பயன்பெற்று கொள்ளலாம்.

வ. எ மண்டலம் வார்டு காப்பகங்கள்

1. 5 ஆண்கள் காப்பகம், எண்.7, திருநகர், திருவொற்றியூர்,சென்னை. கைபேசி எண் - 9789996895/ 7358457989
2. பெண்கள் காப்பகம், எண்.392, தி.எச். சாலை, திருவொற்றியூர், சென்னை. கைபேசி எண் - 9688976575/ 7358457989
3. ஆண்கள் காப்பகம், ஆர்.55, எண்.106-வது தெரு, 3-வது பிரதான சாலை, மாத்துர், மணலி, சென்னை- 68. கைபேசி எண் - 9659994637/ 9840351828
4. ஆண்கள் காப்பகம், சி.எம்.டி.எ டிரக் டெர்மினல், மாதவரம் ரவுண்டானா அருகில்,சென்னை-60. கைபேசி எண் - 9788906071/ 9444479407
5. சிறுமிகள் காப்பகம், எண்.64,போப் ஜான்ஸ் கார்டன், கே.கே. தாளை, மாதவரம், செ-51. கைபேசி எண் - 9940221936/ 9444031098
6. சிறுவர்கள் காப்பகம், எண்.06, சர்வபள்ளி தெரு, மல்லீஸ்வரி நகர், எருக்கஞ்சேரி, செ-118. கைபேசி எண் - 7092079740/ 9444031098
7. சிறுவர்கள் காப்பகம், ராஜ ரத்னம் நகர், கொடுங்கையூர், சென்னை. கைபேசி எண் - 9790819054/ 9444051529
8. ஆண்கள் காப்பகம், எண். 1350/33, 19-வது கிழக்கு கிராஸ் ஸ்ட்ரீட், எம்.கெ.பி நகர், செ- 39. கைபேசி எண் - 9585626519 / 9710394002
9. சிறுமிகள் காப்பகம், சமூக நலக் கூடம், தேசிய நகர், 3-வது தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை-21. கைபேசி எண் - 9444138348
10. மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகம், தொற்று நோய் மருத்துவமனை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை- 81. கைபேசி எண் - 8056224975 / 9444009988
11. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகம், தொற்று நோய் மருத்துவமனை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை- 81. கைபேசி எண் - 7871412182 / 9444009988
12. பெண்கள் சிறப்பு காப்பகம், ஸ்டான்லி, அரசு மருத்துவமனை, பழைய சிறைச்சாலை, சென்னை-01. கைபேசி எண் - 7395969465 / 9790929939
13. ஆண்கள் சிறப்பு காப்பகம், அரசு மருத்துவமனை, பழைய சிறைச்சாலை, சென்னை-01. கைபேசி எண் - 8248155547/ 9840157197
14. ஆண்கள் சிறப்பு காப்பகம், ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமணை, கல்லறை சாலை, ராயபுரம், சென்னை-13. கைபேசி எண் - 6374531649/ 9444691456
15. பெண்கள் சிறப்பு காப்பகம்,ஆர்.எஸ்.ஆர்.எம், மருத்துவமனை, கல்லறை சாலை, ராயபுரம், சென்னை -13. கைபேசி எண் - 9025628461 / 044-42890417
16. சிறுவர்கள் காப்பகம், சென்னை நடுநிலைப்பள்ளி, பி.ஆர்.என்.கார்டன், சென்னை. கைபேசி எண் - 8122234039/9445212533
17. பெண்கள் சிறப்பு காப்பகம், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பூங்கா நகரம், சென்னை. கைபேசி எண் -9384269120/ 9940237030
18. சிறப்பு காப்பகம் ஆண்கள். ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பூங்கா நகரம், சென்னை. கைபேசி எண் -9698712599/ 9841186432
19. பெண்கள் காப்பகம், ராஜாஜி சாலை, இப்ராகிம் தெரு, சென்னை-1. கைபேசி எண் -8610225853 / 9840784290
20. ஆண்கள் சிறப்பு காப்பகம், மகப்பேறு இயல் மற்றும் மயக்கவியல் அரசு மருத்துவமனை, எழும்பூர், சென்னை. கைபேசி எண்- 8667425466/ 9444918604
21. பெண்கள் சிறப்பு காப்பகம், குழந்தை உடல் நலம் எழும்பூர் மருத்துவமனை சென்னை. கைபேசி எண் -8056161224 / 9994089879
22. பெண்கள் சிறப்பு காப்பகம், மகப்பேறு இயல் மற்றும் மயக்கவியல் அரசு மருத்துவமனை, எழும்பூர், சென்னை. கைபேசி எண் -9677544116 / 9944894546
23. ஆண்கள் மற்றும் பெண்கள் காப்பகம், காக்ஸ் காலனி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-02. கைபேசி எண் -7358231623 / 9380901902
24. முதியோர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) காப்பகம், எண். 34/12, 4ஆம் தெரு, தீட்டித் தொட்டம், வீனஸ், செம்பியம், பெரம்பூர்-11. கைபேசி எண் -8681840502/ 9444006212
25. பெண்கள் காப்பகம், மாநகராட்சி கட்டிடம், ஜெய் பீம் நகர், திரு.வி.க. நகர். கைபேசி எண் -9176371224 / 8870081001
26. முதியோர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) காப்பகம், எண். 17/7, பழைய ஆடுதொட்டி சாலை, தட்டாங்குளம், சூளை, சென்னை-12. கைபேசி எண் - 9443500212 / 9840188821
27. ஆண்கள் காப்பகம்,எண். 149A, கண்ணன் கோயில் தெரு, பட்டரவாக்கம், சென்னை-98. கைபேசி எண் -9600360327 / 9884947702
28. ஆண்கள் காப்பகம், எண்.62, பத்மனபா நாயூடு தெரு, வரதராஐபுரம் அம்பத்தூர், சென்னை -53. கைபேசி எண் -9539374951 / 9444254247
29. பெண்கள் காப்பகம், எண்.1/91A, காளமேகம் சாலை (இரண்டாவ து மாடி) முகப்பேர் (மேற்கு) சென்னை-37. கைபேசி எண் -9080116536 / 9444066367
30. பெண்கள் காப்பகம், மாநகராட்சி பள்ளி, கெல்லிஸ், சென்னை. கைபேசி எண் -6383529639 / 9841186432
31. பெண்கள் சிறப்பு காப்பகம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக் கல்லூரி, மருத்துவமனை வளாகம், சென்னை. கைபேசி எண் - 7502663794 / 8667264045
32. ஆண்கள் சிறப்பு காப்பகம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக் கல்லூரி, மருத்துவமனை வளாகம், சென்னை. கைபேசி எண் -8870818945 / 9444472170
33. அறிவுத் திறன் குறையுள்ள (MR) ஆண்கள் காப்பகம், சென்னை தொடக்கப் பள்ளி, முத்து இருளாண்டி தெரு, அமைந்தகரை, சென்னை- 29. கைபேசி எண் -9940357791 / 8072475023
34. திருநங்கைகள் காப்பகம், மாநகராட்சி கட்டிடம், மெக் நிக்கோலஸ் ரோடு தாஸ்புரம் சந்திப்பு சேத்துப்பட்டு, சென்னை. கைபேசி எண் -9092494398 / 9789839907
35. மாற்றுதிறனாளி பெண்கள் காப்பகம், எண்.10, காம்தார் நகர், சென்னை. கைபேசி எண் -8754885607/ 9677222277
36. ஆண்கள் காப்பகம்,சென்னை தொடக்கப்பள்ளி, லாக் நகர், சென்னை. கைபேசி எண் -9487642495 9498098283
37. ஆண்கள் சிறப்பு காப்பகம், அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவனை, விக்டோரியா விடுதி சாலை, சேப்பாக்கம் சென்னை- 05. கைபேசி எண் -7373351598 / 9551517700
38. பெண்கள் சிறப்பு காப்பகம், அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவனை, விக்டோரியா விடுதி சாலை, சேப்பாக்கம்,சென்னை- 05. கைபேசி எண் -8270752543 / 9710394002
39. பெண்கள் காப்பகம், பழைய எண். 25/12, சுப்ரமண்ணிய கார்டன் தங்கவேலு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 05. கைபேசி எண் -8903018546/ 9841287719
40. பெண்கள் காப்பகம், பசும்பொன் முத்துராமலிங்க சாலை, தேனாம்பேட்டை. கைபேசி எண் -8190894858/ 9840096022
41. ஆண்கள் காப்பகம், மார்கெட் தெரு, மந்தைவெளி (போஸ்ட் ஆபிஸ் அருகில்). கைபேசி எண் -9884587575 / 9884411845
42. மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகம், எண்.7, சென்னை தொடக்கப் பள்ளி, டுமிங்க் குப்பம், சந்தோம், சென்னை - 04. கைபேசி எண் -7907345633/ 9500099759
43.ஆண்கள் காப்பகம், ஐய்யப்பா நகர், முதன்மை சாலை, சுற்றுகட்டிடம், கோயம்பேடு, செ- 107. கைபேசி எண் - 9159734547/ 9498098283
44. சிறுவர்கள் காப்பகம், பிலட் எண்: 21, எண்:5, ராஜாஜி அவென்யூ, முதல் பிரதான சாலை, வளசரவாக்கம், செ- 87. கைபேசி எண் -8148377407 / 9841393283
45. பெண்கள் காப்பகம், எண்: 81, 7வது தெரு, அன்பு நகர், வளசரவாக்கம், செ-87. கைபேசி எண் -9003544693 / 9444254247
46. ஆண்கள் காப்பகம், எண் :1, நீயு தெரு, சென்னை மாநகராட்சி வளாக கட்டிடம், 2-வது மாடி, ஆலந்தூர், செ -88 கைபேசி எண் -639486340 / 044-42890417
47. ஆண்கள் காப்பகம், No:1, ரயில்வே பார்டர் சாலை, அப்பாவு நகர், அம்மா உணவகம் அருகில், சென்னை. கைபேசி எண் -9791564419/ 9842452597
48. சிறுமிகள் காப்பகம், மாநகராட்சி பள்ளி, தாமோதரபுரம் பெசன்ட் நகர், சென்னை-20. கைபேசி எண் -8608268780/ 9884629206
49. சிறுவர்கள் காப்பகம், திருவீதி அம்மன் கோயில் தெரு, திருவான்மியூர், செ-01. கைபேசி எண் - 8838605362/ 9444287738
50. ஆண்கள் காப்பகம், கண்ணகி நகர் பொதுநல சங்கம், ஈஞ்சம்பாக்கம், ஈ.சி.ஆர் சாலை, செ-115. கைபேசி எண் -9444712617/ 8667264045
51.பெண்கள் காப்பகம், பளாட் எண். 30, கோபிநாத் 4வது மெயின் ரோடு, எஸ்.என். நகர், வெட்டுவாங்கினி, செ-15. கைபேசி எண் -8098889090 /9940617715.

அன்றைய தினம் மாநகராட்சியின் சார்பாக வீடற்ற பொதுமக்களுக்கு உணவும் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள மாநகராட்சியின் 1913 அழைப்பு, 044-2530 3849 மற்றும் 94451 90472 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும், www.chennaicorporation.gov.in http://www.chennaicorporation.gov.in இணையதளத்தின் காப்பகங்களின் முகவரி மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடற்ற பொதுமக்கள் மாநகராட்சியின் காப்பகங்களில் 22.03.2020 அன்று (நாளை) தங்கிப் பயன் பெறலாம்”.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x