Last Updated : 20 Mar, 2020 07:34 PM

1  

Published : 20 Mar 2020 07:34 PM
Last Updated : 20 Mar 2020 07:34 PM

கரோனா முன்னெச்சரிக்கை: புதுச்சேரி அரசு அலுவலகங்களில் வரும் திங்கள் முதல் ஷிப்ட் முறை

புதுச்சேரி

கரோனா அச்சுறுத்தலால் பணியில் அதிகமானர் பணிபுரிவதை தவிர்க்கும் வகையில் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் வரும் திங்கள் முதல் ஷிப்ட் முறை அமலாகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று மாலை உரையாடினார். அதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

பொதுமக்கள் பொது இடங்களில் அதிகம் கூட வேண்டாம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கண்காணிப்பது குறித்து பிரமதர் தெரிவித்தார். பல்வேறு மாநில முதல்வர்கள் கரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருத்துவ சாதனங்கள் கிடைக்காதது தொடர்பாகவும், மத்திய அரசு உதவி தர கோரினர். ஏழைகளுக்கு குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் அரிசி, கோதுமை கோரினர்.

புதுச்சேரியில் உள்ள 2-மால்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் தங்களின் உணவு பண்டங்களான மளிகை, அரிசி, மருந்து சாதனங்கள் வாங்க மட்டும் அங்குள்ள கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் ஷிப்ட் முறை வரும் திங்கள் முதல் அமலுக்கு வருகிறது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 50 சத ஊழியர்கள் முதல் வாரத்திலும் மீதமுள்ள 50 சதவீத அரசு ஊழியர்கள் அடுத்த வாரத்திலும் பணிபுரிவர். இதனால் அதிகமானோர் அரசு அலுவலகங்களில் இருப்பது குறையும்.

முககவசம், கிருமி நாசினிகளை யாரும் பதுக்க வேண்டும். மக்கள் புகார் தெரிவித்தால் பதுக்கியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி எல்லையில் வ‌ரும் வாகனங்கள் சோதனை செய்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .ஏற்கெனவே புதுச்சேரிக்கு வந்த வெளிநாட்டவரையும் கஎக்கெடுக்கிறோம்.

ஜிப்மரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் குழந்தைகள் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனைக்கு அதிகளவில் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர். சாதாரண விஷயங்களுக்கு தலைமை மருத்துவமனைக்கு வருவதை தவிர்ப்பது நல்லது என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x