Published : 20 Mar 2020 07:06 PM
Last Updated : 20 Mar 2020 07:06 PM
மதுரையில், வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து மூன்று நாள் தனி நபர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று தொடங்கியது.
அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தனி நபராக கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் "கரோனா... பயம் வேண்டாம்... கை கழுவுங்க போதும்..." என்ற பதாகையை கையில் தூக்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் விழிப்புணர்வு நோட்டீஸை மக்களுக்கு வழங்கி சுத்தமாக இருந்தால் கரோனா தாக்காது என்று விரிவாக எடுத்துரைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கரோனா வைரஸ் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது சமூக ஆர்வலர்களை இந்த விழிப்புணர்வில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அதற்கு சம்மதம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கூட்டம் சேர்க்காமல் இயல்பாக மக்கள் நடமாடும் இடங்களில் விழிப்புணர்வை நடத்தலாம் என்று அனுமதி அளித்தார்.
அதன்படி இன்று வியாழக்கிழமை கோரிப்பாளையம் சிக்னலில் விழிப்புணர்வு செய்தேன். மேலும் இரண்டு நாட்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு செய்ய உள்ளேன்.
மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பை பெறும் வகையில் இந்த விழிப்புணர்வை நடத்தி வருகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT