Published : 20 Mar 2020 06:14 PM
Last Updated : 20 Mar 2020 06:14 PM
கரேனா வைரஸ் பரவுவதை தடுக்கும்விதமாக முகக்கவசங்கள் தயாரித்து இலவசமாக வழங்கும் பணியில் வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சியில் திடக்கழிவுமேலாண்மை திட்டத்தில் குப்பைகள் பிரிக்கப்பட்டு மண்புழு உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
கிழிந்த துணிகளில் இருந்து மிதியடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் கரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மூலம் முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தயாரிக்கப்படும் முககவசங்களை இலவசமாக வழங்கிவருகின்றனர். காட்டன் துணியில் தைக்கப்படும் முகக்கவசங்களை துவைத்து பலமுறை பயன்படுத்திக்கொள்ளலாம். முதற்கட்டமாக பேரூராட்சி பணியாளர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து வத்தலகுண்டு பேரூராட்சி செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
முதற்கட்டமாக தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டுவருகிறது.
அடுத்தகட்டமாக பொதுவெளியில் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்க உள்ளோம். பொதுமக்களை பொறுத்தவரையில் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புள்ளோருக்கு இலவசமாக முகக்கவசங்கள்
வழங்க முடிவு செய்துள்ளோம். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT