Published : 20 Mar 2020 12:01 PM
Last Updated : 20 Mar 2020 12:01 PM
பழநி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்ததால் மலைக்கோயில், அடிவாரம் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆறு கால பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடைபெற்றுவருகின்றன.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் மருத்துவபரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் கோயிலுக்கு வர கோயில் நிர்வாகம் முற்றிலும் தடைவிதித்தது.
பழநியிலுள்ள மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில் என பழநி கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலைக்கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடிக்காணப்படுகிறது.
பழநியிலிருந்து கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
மலைக்கோயில் உள்ள கோயில்களில் தினமும் நடைபெறும் காலபூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் கோயில் ஊழியர்கள் கோயிலுக்கு சென்று உரிய நேரத்தில் பூஜைகள் செய்துவருகின்றனர்.
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தடை விதித்து தரிசனத்திற்கு மறுக்கப்படுவது, வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT