Last Updated : 20 Mar, 2020 09:30 AM

 

Published : 20 Mar 2020 09:30 AM
Last Updated : 20 Mar 2020 09:30 AM

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மீன்பிடிச் சட்ட அமலாக்கப் பிரிவுக்கு 19 ஜீப்புகள்: விதியை மீறும் மீனவர்கள் மீது இனி நடவடிக்கை பாயும்

ராமநாதபுரம்

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வரு கிறது.

தடை செய்த வலைகளைப் பயன் படுத்துவது, கடற்கரையிலிருந்து 3 கடல் மைலுக்குள் (நாட்டிக்கல்) விசைப்படகுகள் மீன்பிடிப்பது போன்ற தவறுகள் செய்தால் மீன்வளத்துறையினர் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பர். மீன்வளத்துறையில் போதிய பணியாளர்கள் இல்லா ததால் இச்சட்டத்தை மீறும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.

இதைச் சரி செய்யும் பொருட்டு மீன்வளத்துறையில் புதிதாக கடல் மீன்பிடிச் சட்ட அமலாக்கப்பிரிவை (மெரைன் என்போர்ஸ்மென்ட் விங்) கடந்தாண்டு டிசம்பரில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்படி ஒரு காவல் கண் காணிப்பாளர், ஒரு துணைக் கண்காணிப்பாளர், 10 ஆய்வா ளர்கள், 8 சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட 112 பேர் நியமிக்க ஆணையிடப்பட்டது.

இப்பிரிவினர் மீன்வளத்துறை ஆணையர், இயக்குநர் தலை மையிலும், மாவட்டங்களில் மீன் வளத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் இயங்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

அதன்படி 13 மாவட்டங்களில் 19 உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் இப்பிரிவுக்கு 19 புதிய ஜீப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ரோந்துப் படகுகளும் விரைவில் வழங்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக துணைக் கண்கா ணிப்பாளர் ராதாகிருஷ்ணன், 3 ஆய்வாளர்கள், 2 சார்பு ஆய் வாளர்கள், 11 காவலர்கள் என 17 பேர் இம்மாதத்தில் பொறுப்பேற்றனர். எஞ்சிய 95 பேர் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.

ராமநாதபுரம் தெற்கு, வடக்கு, ராமேசுவரம், மண்டபம் ஆகிய 4 மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரிவுக்கு 4 ஜீப்புகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் ரோந்துப் படகுகளும் விரைவில் வழங்கப்பட உள்ளன.

இனி விதியை மீறும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x