Published : 20 Mar 2020 09:29 AM
Last Updated : 20 Mar 2020 09:29 AM
கரோனா பாதிப்பு காரணமாக மீன்களின் விலை தமிழகத்தில் 25 சதவீதத்துக்கும் மேல் உயர்ந் துள்ளது. பிராய்லர் கோழி இறைச்சி விலை தொடா்ந்து சரிந்து வருகிறது.
இது குறித்து மண்டபம் கோழி வியாபாரி தாவுத் கான் கூறி யதாவது:
தமிழகத்தில் பிராய்லா் கோழிக் கறி விலை கடந்த மாதம் கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டது. தற்போது பிராய்லா் கோழிக்கறி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. ஆனால் நாட்டுக் கோழிக் கறி விலை கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. மேலும் ரூ.5 வரை விற்கப்பட்ட ஒரு முட்டை தற்போது ரூ.3.50-க்கு விற்கப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் பிராய்லர் கோழி, முட்டை வாங்கும் ஆா்வம் மக்களிடம் குறைந்து விட்டது என்றார்.
மீன் விற்பனை குறித்து பாம்பன் மீன் வியாபாரி ஜெபமாலை கூறியதாவது:
தற்போது பிராய்லர் கோழி, முட்டைகளை விரும்பாத மக்கள் மீன் உணவை அதிகம் நாடத் தொடங்கியுள்ளனா். இதனால், விளா மீன் கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.500-க்கு உயா்ந்துவிட்டது. சீலா மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1000 வரை விற்கப்படுகிறது. நண்டு ரூ.500-க்கும், கணவாய் ரூ. 400, நெத்திலி ரூ.300 என்ற விலையில் மீன்கள் விற்கப்படுகிறது. ஆனால் கரோனா பாதிப்பால் வெளிநாட்டுக்கு மீன்கள் ஏற்றுமதி தடைபட்டால் இவற்றின் விலை தமிழக சந்தைகளில் பெருமளவு குறையும் என்றார். எஸ்.முஹம்மது ராஃபி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT