Published : 18 Mar 2020 03:23 PM
Last Updated : 18 Mar 2020 03:23 PM

கரோனா அச்சம்: பயணிகள் வரத்து குறைவு; ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு

கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பயணங்களைத் தவிர்த்ததால் முக்கிய ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பை ஒட்டி தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் செல்லும் ரயில் பயணிகளின் வரத்து குறைந்துள்ளது.

இதனால் சில முக்கிய ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது.

அதுகுறித்த விவரம்:

(ரயில் எண் 16204 ) திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்: மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை ரத்து. (14 ட்ரிப்)

( ரயில் எண் 16203) சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்: மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை ரத்து (14 ட்ரிப்)

சிறப்பு ரயில்கள் ரத்து:

(ரயில் எண் 07117) ஹைதராபாத் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்: மார்ச் 21, 25 தேதிகளில் ரத்து.

( 07118) எர்ணாகுளம் ஜங்ஷன் - ஹைதராபாத் சிறப்பு ரயில்: மார்ச் 26-ம் தேதி ரத்து.

(07610) ஹைதராபாத் - திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில்: மார்ச் 23, 30 தேதிகளில் ரத்து.

(07609) திருச்சிராப்பள்ளி - ஹைதராபாத் சிறப்பு ரயில்: மார்ச் 25, ஏப்ரல் 1 தேதிகளில் ரத்து.

(08301) சம்பல்பூர் பனஸ்வாடி சிறப்பு ரயில்: மார்ச் 18, 25 தேதிகளில் ரத்து.

(08302) பனஸ்வாடி - சம்பல்பூர் சிறப்பு ரயில்: மார்ச் 19, 26 தேதிகளில் ரத்து.

(06059) சென்னை சென்ட்ரல்-செகந்தராபாத் சிறப்பு ரயில்: மார்ச் 27, 29 தேதிகளில் ரத்து.

(06060)செகந்திராபாத் -சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்: மார்ச் 28, 30 தேதிகளில் ரத்து.

(06048)திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்: ஏப்ரல் 1-ம் தேதி ரத்து.

(06047) சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில்: ஏப்ரல் 2-ம் தேதி ரத்து.

(06045) எர்ணாகுளம் ஜங்ஷன்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில்: ஏப்ரல் 2-ம் தேதி ரத்து.

(06046) ராமேஸ்வரம்- எர்ணாகுளம் ஜங்ஷன் சிறப்பு ரயில்: ஏப்ரல் 3-ம் தேதி ரத்து.

(06043) விழுப்புரம்-செகந்தராபாத் சிறப்பு ரயில்: ஏப்ரல் 1-ம் தேதி ரத்து.

(06044) செகந்திராபாத்-விழுப்புரம் சிறப்பு ரயில்: ஏப்ரல் 2-ம் தேதி ரத்து.

கரோனா வைரஸ் காரணமாக குறைந்த அளவு பயணிகள் வருகின்ற காரணத்தினால் மேற்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x