Published : 18 Mar 2020 12:18 PM
Last Updated : 18 Mar 2020 12:18 PM
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் இருந்து இயங்கும் 5 உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகள் செல்லும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று முதல் (18. 03. 20) மதுரையிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் வரும் 28ம்- தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் மதுரையிலிருந்து காலை 8 மணிக்கு ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானமும் இன்றிலிருந்து 28-ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரையிலிருந்து இரவு 9.15 மணிக்கு சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திலிருந்து அன்றாடம் 23 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வெளிநாடுகளுக்கான சேவையில் ஸ்பைஸ்ஜெட் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற விமானங்கள் தற்காலிகமாக 3 விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன.
தற்போது உள்நாட்டு சேவையிலும், தற்காலிகமாக 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 15 விமானங்கள் மட்டுமே மதுரையில் இருந்து சென்னை, டெல்லி, பெங்களுரு செல்லும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT