Published : 20 Aug 2015 08:28 AM
Last Updated : 20 Aug 2015 08:28 AM
கேரளம் மட்டுமின்றி கன்னியாகு மரி மாவட்டத்திலும் ஓணம் விழா விமரிசையாக தொடங்கியது. மக்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்றனர்.
மலையாள மக்களின் முதன்மை விழாவான ஓணம் பண் டிகை ஆவணி மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் நாளில் தொடங்கு கிறது. அதில் இருந்து 10-ம் நாள் திருவோணம் நாளன்று ஓணம் விழா கொண்டாடப்படுகிறது.
கேரள மாநிலத்தில் மட்டு மின்றி, அதன் எல்லைப் பகுதி களான கன்னியாகுமரி, கோவை, தேனி போன்ற மாவட்டங்களிலும் மற்றும் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இவ்விழா ஹஸ்தம் நாளான நேற்று விமரிசையாக தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஓணத்தை வரவேற்கும் விதமாக பெண்களும், சிறுமியரும் நேற்று பல்வேறு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந் தனர்.
பத்மநாபபுரம் அரண்மனை
கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவோடு இருந்தபோது திருவிதாங்கூர் மன்னர்களின் தலைநகராக இருந்தது பத்மநாப புரம். இங்குள்ள அரண்மனையில் 10 நாள் ஓணம் விழாவை நேற்று கேரள தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் பிரேம் குமார் தொடங்கி வைத்தார்.
அரண்மனை கண்காணிப் பாளர் ராஜேஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அரண்மனை வாயிலில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதை ஏராளமானோர் பார்த்து மகிழ்ந்தனர்.
கேரள தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் பிரேம் குமார் கூறும்போது, `கேரள பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் பத்மநாபபுரம் அரண்மனையில் 10 நாள் ஓணம் கொண்டாட்டம் நடக்கிறது. தினமும் கேரளப் பெண்களும், சிறுமியரும் இங்கு விதவிதமான அத்தப்பூ கோலம் போடுவர். 24-ம் தேதி அரண்மனையில் ஓணம் விருந்து வழங்கப்படும். அன்று முதல் 26-ம் தேதி வரை ஓண விளையாட்டுகள் நடைபெறும். பெண்களும், குழந்தைகளும் ஓண ஊஞ்சல் ஆடி மகிழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் 26-ம் தேதியில் இருந்து 29-ம் தேதி வரை பத்மநாபபுரம் அரண்மனை மின்னொளியில் காட்சியளிக்கும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT