Published : 12 Mar 2020 10:49 AM
Last Updated : 12 Mar 2020 10:49 AM
உணவுப் பாதுகாப்பு தரச் சட் டத்தால் அக்மார்க் தரச்சான்று பெறுவதை உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதனால் உணவுப் பொருட்களின் தரத்தைக் கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப் பதற்காக, வேளாண்மை விற் பனைத்துறை மூலம் அக்மார்க் தரச்சான்று வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது.
இதற்காக தமிழகம் முழுவதும் தொழில் வாய் ப்புள்ள 31 இடங்களில் அக் மார்க் ஆய்வகங்கள் ஏற்படுத் தப்பட்டன.
இங்கு வேளாண்மை, கால் நடை, தோட்டக்கலை, வனம் மூலம் தயாரிக்கும் உணவுப் பொருட்களுக்கு அக்மார்க் தரச் சான்று வழங்கப்படுகிறது.
இதையடுத்து அரிசி, பருப்பு வகைகள், தேன், நெய், வெண் ணெய், எண்ணெய் வகைகள், புண்ணாக்கு, கோதுமை, மசாலாப் பொடி, புளி, சேமியா, வெல்லம், கடலை மாவு, பெருங்காயம் உள்ளிட்ட பொருட்கள் அக்மார்க் முத்தி ரையுடன் விற்பனைக்கு வந்தன.
அரசே தரத்தை நிர்ணயிப்பதால் அக்மார்க் முத்திரை பெற்ற உணவுப் பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது.
உணவுப் பாதுகாப்பு தரச் சட்டத்தைச் செயல்படுத்திய பிறகு, அனைத்து வகையான உணவுப் பொருட்களும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் (எப்எஸ்எஸ்ஏஐ) பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெற வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியது.
இதனால் உணவுப்பொருட்கள் உற்பத்தியாளர்களில் பெரும் பாலானோர் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பதிவுச் சான்று, உரிமத்தை மட்டும் வாங்கிக் கொண்டு அக்மார்க் முத்திரை பெறுவதில்லை. மேலும் அக்மார்க் முத்திரை பெறுவதற்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், பெரும்பாலானோர் அதைத் தவிர்க்கின்றனர்.
நெய், தேன், வெண்ணெய் போன்ற சில பொருட்களுக்கு மட்டும் அக்மார்க் முத்திரை பெற்று வருகின்றனர்.
மேலும் உற்பத்தியாளர்கள் உணவுப் பொருட்களில் எப்எஸ் எஸ்ஏஐ-யிடம் பெற்ற உரிமம் எண்ணைப் பதிவு செய்கின்றனர். இதனால் உணவுப்பொருட்கள் தரமானவை என எண்ணி, அவற்றை நுகர்வோர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் என்பது உணவுப் பொருட்கள் விற் பனைக்கான அனுமதி மட்டுமே என்பது நுகர்வோருக்குத் தெரிய வாய்ப்பில்லை. மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களும் உணவுப் பொருட்களின் தரத்தை அறிய அவ்வப்போது அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆய் வகங்களுக்கு அனுப் புகின்றனர்.
அத்துறையில் சென்னை, சேலம், கோவை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய 6 இடங்களில் மட்டுமே ஆய்வகங்கள் உள்ளதால் முடிவுகள் வருவதற்கு 6 மாதங் களுக்கு மேல் ஆகின்றன. இதனால் காலாவதியாகும் தேதி ஓராண்டுக்கு மேல் உள்ள பொருட்களை மட்டுமே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து கொள்கின்றனர். அதற்கு கீழே காலாவதியாகும் பொருட்களை ஆய்வு செய்வதில்லை.
இதனால் அப்பொருட்களின் தரத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து உணவுப் பொருட்களுக்கு அக் மார்க் முத்திரை பெறுவதை உற்பத்தியாளர்களிடம் அரசு ஊக்கப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சங்க நிர்வாகிகள் கூறுகையில், எப்எஸ்எஸ்ஏஐ சான்றும், அக்மார்க் சான்றும் வேறுவேறு என்பதை நுகர்வோரிடமும், உணவுப்பொருட்கள் உற்பத்தி யாளர்களிடம் அரசு தெளிவுப்படுத்த வேண்டும். தொடர்ந்து உணவுப் பொருட்களின் தரத்தைக் கண் காணித்து உறுதிப்படுத்த வேண் டும் என்றனர்.நெய், தேன், வெண்ணெய் போன்ற சில பொருட்களுக்கு மட்டும் அக்மார்க் முத்திரை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT