Published : 11 Mar 2020 09:21 AM
Last Updated : 11 Mar 2020 09:21 AM
மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சி, வரும் 14-ம் தேதி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கறியிருப்பதாவது:
திமுக பொதுச்செயலாளராக இருந்து மறைந்த க.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சி மார்ச் 14-ம்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்பழகன் படத்தை திறந்து வைப்பார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள்கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர், எம்ஜிஆர் கழக தலைவர்ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும்,
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார் இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மாவாசி,
மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலைக் கட்சி நிறுவனத் தலைவர் க.முருகவேல்ராஜன், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது ஆகியோரும் நினைவேந்தல் உரையாற்ற உள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT