Published : 10 Mar 2020 10:09 PM
Last Updated : 10 Mar 2020 10:09 PM

கைவிடப்பட்ட சாலையோரம் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த செயலி மூலம் புகார் அளிக்கலாம்: போக்குவரத்து காவல்துறை

கைவிடப்பட்ட நிலையில், யாரும் உரிமை கோராமல் சாலைகள் மற்றும் தெரு ஓரங்களில் உள்ள வாகனங்கள் குறித்து ஜிடிபி சிட்டிசன் சர்வீசஸ் மொபைல் ஆப் (GCTP Citizen Services Mobile App) மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு:

''சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில் பழைய மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாகனங்கள், யாரும் உரிமை கோராமல் கைவிடப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது.

இதுபோன்ற யாரும் உரிமை கோராத, கைவிடப்பட்ட நிலையில் அந்த வாகனங்களை காவல்துறை அப்புறப்படுத்தி வருகின்றது. இதுபோன்ற இடங்களில் உள்ள சாலைகளில் உரிமை கோராமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்கள் குறித்த தகவலை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து சென்னை பெருநகர காவல்துறையின் சிசிடிவி சிட்டிசன் சர்வீசஸ் (GCTP Citizen Services” Mobile App) என்ற கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்து மேற்படி வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்”.

இவ்வாறு போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x