Published : 10 Mar 2020 11:30 AM
Last Updated : 10 Mar 2020 11:30 AM
ஏற்கெனவே, “நாக்கை அறுப்பேன்... கழுத்தை வெட்டுவேன்” என்றெல்லாம் அடாவடியாகப் பேசி முதல்வரின் கண்டிப்புக்கு ஆளானார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அதன்பிறகும் திருந்தாத அமைச்சர், தன்னை ஒரு இந்து மத அபிமானியாக காட்டிக்கொண்டு பாஜக ஆதரவைத் தேடினார். இந்த நிலையில் இப்போது, வாரமிருமுறை பத்திரிகையின் விருதுநகர் நிருபர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் ராஜேந்திர பாலாஜியின் கைபானங்கள். அமைச்சருக்கும் சாத்தூர் அதிமுக எம்எல்ஏ-வான ராஜவர்மனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரை எழுதியதற்காகத்தான் இந்தத் தாக்குதலாம்.
தாக்குதலுக்குள்ளான நிருபர் கார்த்தி தனது புகாரில் அமைச்சரின் தூண்டுதலால்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது என்று சொன்னாராம். ஆனால், அவரது பெயரை விட்டுவிட்டு எஃப்.ஐ.ஆர் எழுதியிருக்கிறார்கள். தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. அதிமுக தரப்பிலும் இந்த விவகாரத்தை சீரியஸாகவே பார்க்கிறார்களாம். ‘‘அடிக்கடி இப்படி தேவையற்ற சர்ச்சையில் சிக்கி ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயரை உண்டாக்கும் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து ஒதுக்கி வையுங்கள்” என்று சக அமைச்சர்கள் சிலரே முதல்வரிடம் வலியுறுத்தி வருகிறார்களாம்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 18, 2020)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT