Published : 10 Mar 2020 10:14 AM
Last Updated : 10 Mar 2020 10:14 AM
சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு சமூக அறிவியல் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்புக்கு இந்தக் கல்வியாண்டில் (2019-20) புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது. பொதுத் தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப். 13-ம் தேதி முடிவடைகிறது.
புதிய பாடத்திட்ட அடிப் படையில் சமூக அறிவியல் வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 14-க்கு பதில் அளிக்க வேண்டும். இரு மதிப்பெண் வினாக்கள் 14 கேட்கப்படும். அதில் 10 வினாக்களுக்கு பதில ளிக்க வேண்டும். அதேபோல், 5 மதிப்பெண் வினாக்கள் 14 கேட்கப்படும். அதில் 10 வினாக் களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
மேலும் 5 மதிப்பெண் வினாக் களில் 42-வது கேள்வி உலக வரைபடம் பற்றி கேட்கப்படும். அதற்குக் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். தொடர்ந்து 8 மதிப்பெண் வினாக்கள் 2 கேட்கப் படும். அதில் 44-வது கேள்வியில் இந்திய வரைபடம் (அ) தமிழ்நாடு வரைபடம் பற்றிய கேள்வி இடம்பெறும்.
மேலும் 43-வது கேள்வியில் தலைப்புகள் கொடுத்து வினாக் களுக்கு பதில் அளிக்கும் வகை யில் கேட்கக் கூடாது.
அதற்கு பதிலாக 2 வினாக்கள் கொடுத்து, அதில் ஏதாவது ஒன்றுக்குப் பதில் அளிக்கும் வகையில் கேட்க வேண்டும் எனக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், மாண வர்களும் தேர்வுக்குத் தயாராகி வந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த முதலாவது திருப்புதல் தேர் வில் சமூக அறிவியல் பாடத்தில் 43-வது கேள்வியில் தலைப்புகள் கொடுத்து, வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கேள்வி இடம் பெற்றிருந்தது. கல்வித்துறை நிராகரித்த கேள்வியே இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பத்தாம் வகுப்பு சமூக அறி வியல் ஆசிரியர்கள் கூறுகையில், ‘திருப்புதல் தேர்வில் கல்வித்துறை நிராகரித்த கேள்வி வடிவமைப்பே இடம் பெற்றுள்ளது. இதனால் தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் குழப்பம் அடைந் துள்ளனர். பொதுத் தேர்வில் எப்படி கேட்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வினாத்தாள் வடிவமைப்பை கல்வித்துறை முறையாக வெளியிட வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT