Published : 10 Mar 2020 08:36 AM
Last Updated : 10 Mar 2020 08:36 AM
இங்கிலாந்து நாட்டின் கியூ.எஸ். தரவரிசை நிறுவனம் இந்திய அளவில் வெளியிட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்திருப்பதாக அப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி, பாடத்
திட்டம், ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுதல், தொழிற்சாலையுடன் இணைந்த கல்விமுறை ஆகியவற்றை இங்கிலாந்து நாட்டின் கியூ.எஸ் தரவரிசை நிறுவனம் ஆய்வு செய்து ஆண்டுதோறும் தரவரிசை சான்று வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான, உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் விஐடி 450 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் தனியார் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் விஐடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியலில் விஐடி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 150 இடங்கள் முன்னேறி, இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்திருக்கிறது.
அதே போல் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் சிஸ்டம் மற்றும் வேதியியல் பாடங்களில் விஐடி 50 இடங்கள் முன்னேறியிருக்கிறது.
விஐடியின் கெமிக்கல் இன்ஜினீயரிங் 350-வது இடங்களுக்குள்ளும், மெக்கானிக்கல் மற்றும் உற்பத்தி பாடங்களில் 450-வது இடங்களுக்குள் தரவரிசை பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே மத்திய அரசின் சார்பில், நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதில் விஐடி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT