Published : 07 Mar 2020 03:31 PM
Last Updated : 07 Mar 2020 03:31 PM
திமுக தலைவர் கருணாநிதியும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் வாழ்நாள் முழுவதும் தங்கள் நட்பைத் தொடர்ந்து நட்புக்கு இலக்கணமாக விளங்கினர். வாழும்போதும் இணை பிரியாத அவர்கள் ஒற்றுமை மரணத் தேதியிலும் ஒன்றாக இருந்த விநோதம் நிகழ்ந்துள்ளது.
கலைஞர் கருணாநிதியும் பேராசிரியர் அன்பழகனும் 1942-ல் சந்தித்தது முதல் நட்பாக இருந்து வருகின்றனர். கருணாநிதியைவிட 2 வயது மூத்தவராயினும் இவர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தலைவர்கள் எனலாம். இருவரும் 75 ஆண்டுகளைக் கடந்து நட்புடன் வாழ்ந்து வந்தனர்.
2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் கருணாநிதி உயிரிழந்தார். அவரின் மறைவு இருவரின் நட்புப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பின்னர் அன்பழகனும் மனதளவில் ஒடிந்துபோனார். 2018-ம் ஆண்டு ஸ்டாலின் திமுக தலைவராகப் பதவியேற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவராக முன்மொழிந்தது, அதன் பின்னர் சிலை திறப்பு விழா கூட்டம் என ஓரிரு கூட்டத்துடன் பேராசிரியர் அன்பழகன் பொதுவாழ்வுப் பணியை நிறுத்திக்கொண்டார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த க.அன்பழகன் மார்ச் 7-ம் தேதி காலமானார். மரணத் தேதியிலும் நண்பர்கள் இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமை இயற்கையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்பழகனின் மரணத்துக்கு முந்தைய நாளான மார்ச் 6-ம் தேதி அன்றுதான் திமுக ஆட்சிக்கட்டிலில் முதன் முதலாக 1967-ல் அமர்ந்தது. திமுகவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான அன்பழகன் எண்ணம் நிறைவேறிய நாள் அது என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT