Last Updated : 06 Mar, 2020 05:57 PM

 

Published : 06 Mar 2020 05:57 PM
Last Updated : 06 Mar 2020 05:57 PM

மிரட்டல் காரணமாகவே தம்பி தற்கொலை: நடிகர் ஆனந்த்ராஜ் புகார்

மிரட்டல் காரணமாகவே என் தம்பி தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சினை காரணமல்ல என்று நடிகர் ஆனந்த்ராஜ் புகார் தெரிவித்தார்.

புதுச்சேரி திருமுடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகசபை. இவர் நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி. கோவிந்த சாலை பகுதியில் உள்ள திருமுறை நகரில் கனகசபை வசித்து வந்தார்.

ஏலச்சீட்டு, பைனான்ஸ் நடத்தி வந்த கனகசபை, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தங்களது பணத்தை உடனடியாகத் தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகசபையின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏலச்சீட்டு காரணமாகவும் கடன் தொல்லை காரணமாகவும் அவர் இறந்ததாகத் தகவல் வெளியானது.

ஏலச்சீட்டு போட்டவர்கள் தங்கள் பணத்துக்காக அங்கும் வந்து குவிந்தனர். இச்சூழலில் பிரேதப் பரிசோதனைக் கூடம் அருகே நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடன் பிரச்சினையால் என் தம்பி தற்கொலை செய்துகொள்ளவில்லை. மிரட்டல் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில் ஒரு வீடு வாங்கியதில் பல்வேறு தலையீடுகள் இருந்தன. அதுவே அவரது தற்கொலைக்குக் காரணம்.

தற்கொலைக்கு முன்பு அவர் 4 பக்கத்துக்குக் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் சிலரைக் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி புதுச்சேரி அரசும் காவல் துறையும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அவர் இறப்பு குறித்து விசாரணை நடந்து வருவதால் எந்தத் தகவலையும் வெளியிட முடியாது. என் தம்பியின் மரணம் எனக்குப் பேரிழப்பு" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x