Published : 30 Aug 2015 01:30 PM
Last Updated : 30 Aug 2015 01:30 PM
விற்பனை குறைவால் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் ஏராளமாக இருப்பில் உள்ளதாலும், இந்த ஆண்டில் இதுவரை வடமாநில வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்கள் கிடைக்காததாலும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மந்தமடைந்துள்ளது.
பட்டாசு உற்பத்தியில் தமிழகத் திலுள்ள சிவகாசி நாட்டிலேயே சிறப்பிடம் பிடித்து வருகிறது. வறட்சி, விவசாயமின்மை போன்ற காரணங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவதால் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் அதிகம் தோன்றியுள்ளன. சிவகாசி மற்றும் அதையொட்டிய பகுதி களில் மாவட்ட உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் 180-ம், மத் திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்ற 750-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும் இயங்கி வருகின்றன.
இந்த ஆலைகள் மூலம் 2 லட்சத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், பட்டாசு ஆலை யின் உபதொழில்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமா னோர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் பெற்று வருகின்றனர். பட்டாசு உற்பத்திக்கு மூலப்பொருள் களான அலுமினியம் பாஸ்பேட், வெடிஉப்பு எனப்படும் பொட்டா ஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பெரியம் நைட்ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ராங் சஷியம் நைட்ரேட், அலுமினிய கம்பி, ஸ்பார்க்லர் உள்ளிட்ட பொருள்களின் விலைகளும் இந்த ஆண்டு சராசரியாக 20 சதவீதம் உயர்ந்துள்ளன.
இந்த ரசாயனங்களைப் பயன் படுத்தி சத்தம் ஏற்படுத்தும் பட்டாசு கள், ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகள், இவையிரண்டும் இணைந்த வகை பட்டாசுகள் என 3 வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், இதில் ஒவ்வொரு வகையிலும் சுமார் 200 முதல் 250 வகையிலான பட்டாசு ரகங்கள் சிவகாசியில் தயாரிக்கப்படுவது தனிச்சிறப்பு.
தீபாவளி, தசரா பண்டிகை களுக்காக மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு சீசன் தொழிலாக இருந்து வந்த நிலை மாறி, கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டு முழுவ தும் உற்பத்தி செய்யப்படும் தொழிலாக உருவெடுத்துள்ளது. பண்டிகைகளுக்கு மட்டும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்திலிருந்து திருமணம், வரவேற்பு, காதுகுத்து, கோயில் திருவிழாக்கள், தேர்தல் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றபோது மட்டுமின்றி இறுதி ஊர்வலம் வரை பட்டாசு வெடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.
நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 95 சதவீத தேவையை சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உற்பத்தி யாகும் பட்டாசுகள் பூர்த்தி செய் கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு சீனப் பட்டாசு இறக்குமதியாலும், வட மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றத்தாலும் பட்டாசு விற்பனை பாதியாகக் குறைந்தது.
கடந்த ஆண்டில் உற்பத்தி செய் யப்பட்ட பட்டாசுகள், ஏராள மாக ஆலைகளிலேயே தேக்க மடைந்துள்ளன. இதனால் இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தமடைந்துள்ளது. ரக் ஷாபந்தன், தசரா போன்ற பண்டிகைகளுக்காக வடமாநில வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்கள் இதுவரை பெறப்படாததும் பட்டாசு தொழில் மந்தம் அடைந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பட் டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தி யாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஏ.பி.செல்வராஜன் கூறியதாவது: வடமாநிலங்களில்தான் பட்டாசு விற்பனை அதிகமாக இருக் கும். ஆனால், இந்த ஆண்டு பருவ நிலை மாறுபாடு காரணமாக வட மாநிலங்களில் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு விற்பனை குறைந்ததால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. அடுத்தமாத தொடக்கத்தில் வடமாநில வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
*
கருந்திரி தயாரிக்க அனுமதியளிக்க வேண்டும்
மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி கூறியதாவது: ‘‘சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உரிமம் இன்றி கருந்திரி தயாரிக்கப்பட்டது குறித்து அதிகாரிகளின் நடவடிக்கையால் கருந்திரி தயாரிப்பு குறைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம்பெற்ற பட்டாசு ஆலைகளில் போதிய இடவசதி இல்லாததால் பலர் வெளிநபர்கள் தயாரித்த கருந்திரிகளையே கொள்முதல் செய்து வந்தனர். தற்போது அது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தியும் குறைந்துள்ளது. எனவே, சிறு பட்டாசு ஆலைகளிலும் கருந்திரி தயாரிக்க அரசு அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலம், சட்டவிரோதமாக கருந்திரி தயாரிப்பதும், அதனால் ஏற்படும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT