Published : 04 Mar 2020 07:14 AM
Last Updated : 04 Mar 2020 07:14 AM
கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னை குடிநீர் வாரியத்தின் 6 ஆயிரம், 9 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாத ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை 350-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் எளிய முறையில் பெறுவதற்கான வழி முறைகளை அரசு விரைவில் உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் தினமும் 4 லட் சம் கேன் குடிநீர் விற்பனையாகிறது. இந்த வேலைநிறுத்தப் போராட் டத்தால் சென்னையில் பன்னடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் ஏற்பட்டுள்ள தட் டுப்பாட்டைச் சமாளிக்க சென்னை குடிநீர் வாரிய லாரி தண் ணீரை மக்கள் வாங்கத் தொடங்கி யுள்ளனர்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் குழாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது. சென் னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரி களின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. தற் போது 6,157 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 1,049 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு இருந் தது.
சென்னை தெருவோரக் குழாய் களில் குடிநீர் தாராளமாகக் கிடைப் பதால், லாரி சர்வீஸ் மூலம் தண்ணீர் வழங்கும் பகுதிகளில் குடிநீர் தேவை குறைந்துவிட்டது. அப்பகுதிகளில் அண்மையில் தினமும் 12 ,500 நடைகள் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இப்போது 5 ஆயிரம் நடைகள் மட்டுமே செல்கிறது.
கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், குடியிருப்புகள், வணிக வளாகங் களில் சென்னை குடிநீர் வாரிய லாரி தண்ணீர் (6 ஆயிரம் லிட்டர், 9 ஆயிரம் லிட்டர்) அதிகமாக வாங்குகிறார்கள். இதனால் சென்னை குடிநீர் வாரிய லாரி தண் ணீர் விற்பனை தினமும் 50 நடை அதிகரித்துள்ளது.
தண்ணீர் தேவைப்படுவோர் 044-45674567 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம். பதிவு செய்த 2 நாட்களுக்குள் குடிநீர் விநியோகிக்கப்படும். போதியளவு நீர் இருப்பு இருப்பதால், நிலுவை இல்லாமல் உடனுக்குடன் லாரி குடிநீர் வழங்குகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT