Last Updated : 20 Aug, 2015 12:37 PM

 

Published : 20 Aug 2015 12:37 PM
Last Updated : 20 Aug 2015 12:37 PM

தமிழகத்தில் முதல்முறை: கிருஷ்ணகிரியில் 15 ஊராட்சிகளில் 100% தனிநபர் இல்ல கழிப்பறை

சுகாதார தூதுவர்களாக மாணவர்களை நியமிக்க முடிவு

தமிழகத்தில் முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 ஊராட்சிகளில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் 100% கட்டப் பட்டுள்ளதாகவும், இதனை முழுமையாக கண்காணிக்க பள்ளி மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமிக்க முடிவு செய்துள்ள தாகவும் ஆட்சியர் ராஜேஷ் தெரிவித்தார். இது குறித்து ஆட்சியர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 60 ஆயிரத்து 459 தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 15 ஊராட்சிகளில் 100 சதவீதம் தனிநபர் கழிப்பறை கள் கட்டப்பட்டுள்ளன.

தற்போது முற்றிலும் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற சுத்தமான தூய்மை ஊராட்சியாக தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர்.

மேலும், ஊராட்சிகளில் 100 சதவீதம் கழிப்பறை கட்டப்பட்டுள்ள தாகவும், ஊராட்சி களை தூய்மை யாக வைத்துக் கொள்வேன் என்றும் அந்த ஊராட்சிகளின் தலைவர்கள் உறுதிமொழி அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் 2-ம் தேதிக்குள் 101 கிராமங்களில் 25 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்திலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தான் 15 ஊராட்சிகளில் 100% முழுமையாக தனி நபர் இல்ல கழிவறை கட்டப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க பள்ளி மாணவர்கள் சுகாதார தூதுவர் களாக நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

சுகாதார தூதுவர்கள் குறித்து 'தி இந்து'விடம் ஊரக திட்ட இயக்கு நர் மந்திராசலம் கூறும்போது, கிராம மக்களிடையே கழிவறை கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்கு அந்த பழக்கத்தை தொடரவும், பள்ளி மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமிக்கப் பட உள்ளோம். அவர்கள் வசிக்கும் பகுதியில் அதிகாலையில் விசில் ஊதிக் கொண்டு தெருவில் வலம் வருவார்கள்.

பொது இடங்களில் யாராவது மலம் கழித்தால், அவர் களது பெயரை அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்கப் பட்டுள்ள கரும்பலகையில் எழுதப் படும். இதனால் அனைவரும் தனிநபர் கழிவறைகள் பயன் படுத்தும் பழக்கத்திற்கு மாறுவார் கள், என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் தனிநபர் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு ஆட்சியர் ராஜேஷ் விருது வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x