Published : 04 Mar 2020 06:55 AM
Last Updated : 04 Mar 2020 06:55 AM

என்பிஆர்-ஐ நடைமுறைப்படுத்தினால் தமிழக எம்எல்ஏக்கள் 234 பேரையும் கடத்துவோம்: காவல் ஆய்வாளருக்கு மிரட்டல் கடிதம்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய குடி மக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) நடைமுறைப் படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள 234 எம்எல்ஏக்களையும் கடத்துவோம் என ‘அல்-ஹக்’ என்ற என்ற அமைப்பு பெயரில் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியவர் களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து உள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. சென்னை வண் ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ‘சென்னை ஷாஹின் பாக்’ என்ற பெயரில் கடந்த 14-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப் பினர். அதுமட்டுமில்லாமல், போராட் டத்தின் 4-வது நாளில் ஒரு ஜோடிக்கு திருமணமும்,13-வது நாளில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பும் நடத்தினர்.

மேலும் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து போராட்டக் குழு தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், “மக்கள் தொகை கணக்கெடுப்பை ரத்து செய்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். அதோடு குடி யுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட் டோம் என உறுதியளிக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி னோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், போராட்டம் நேற்று 19-வது நாளாக நீடித்தது. முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பு கள் சேப்பாக்கத்தில் பேரணி நடத் தினர். இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில், கையெழுத்து இல்லை.

‘அல்-ஹக்’ என்ற புதிய அமைப்பின் பெயரில் வந்த அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘அல் ஹக்’ என்ற பெயரில் நாங் கள் 250 பேர் ஓர் இயக்கமாக செயல் படுகிறோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடை முறைப்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப் படுத்தினால் எங்கள் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களை யும் கடத்துவோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடி விசாரணை நடத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட்டார். மிரட்டல் கடிதம் எழுதியவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x