Last Updated : 03 Mar, 2020 09:18 PM

 

Published : 03 Mar 2020 09:18 PM
Last Updated : 03 Mar 2020 09:18 PM

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு: பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்- முழு விவரம்

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (மார்ச் 4) முதல் 15-ம் தேதி வரையிலும் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* மதுரை - பழனி பயணிகள் ரயில் இன்று முதல் 14-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த நாட்களில் பயணிகள் வசதிக்காக ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.45 மணிக்கு பழனிக்கு சென்று சேரும்.

* மதுரையிலிருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும் மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் மற்றும் ராமேசுவரத்திலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில் இன்று முதல் 15ம் தேதி வரையிலும் ஞாயிற்றுக் கிழமை தவிர முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* மதுரை - செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் இன்று முதல் 15-ம் தேதி வரை 5 மற்றும் 12-ம் தவிர, மதுரை - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* நாகர்கோவில் - கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் இன்று முதல் 15-ம் தேதி வரையில், 5, 12-ம் தேதி தவிர திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில் 4-ம் தேதி முதல் 1-5ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, மானாமதுரை - ராமேசுவரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* தூத்துக்குடி - திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில் 12-ம்தேதி முதல் 15-ம்தேதி வரை நெல்லை- தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் மார்ச் 5, 6, 7, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் கோவில்பட்டி – நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையேயும், மார்ச் 4, 8, 11 மற்றும் 15 ஆகிய நாட்களில் மதுரை – நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

* நெல்லை - ஈரோடு பயணிகள் ரயில் இன்று முதல் 15-ம் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து 115 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.

* நெல்லை/திண்டுக்கல் - மயிலாடுதுறை இணைப்பு ரயில் 5, 07, 10, 12 மற்றும் 14-ம் தேதிகளில் 135 நிமிடம் தாமதமாக திருச்சிக்கு சென்று சேரும்.

* திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் இன்று முதல் 14-ம் தேதி வரை புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, 60 நிமிடம் தாமதமாக பொள்ளாச்சிக்கு சென்று சேரும்.

* திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் மார்ச் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கோவில்பட்டி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

* தாம்பரம்-நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் மார்ச் 11-ம் தேதி முதல் 15 வரை திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

* திண்டுக்கல் - மயிலாடுதுறை - திண்டுக்கல் இணைப்பு ரயில் மார்ச் 5, 7, 10, 12, 14 ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படும். காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் 15-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, காரைக்குடியிலிருந்து காலை 9.50 மணிக்கு பதிலாக முற்பகல் 11 மணிக்கு புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு திருச்சியை சென்று சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x