Published : 28 Feb 2020 08:18 PM
Last Updated : 28 Feb 2020 08:18 PM
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய தேசிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்க புதுச்சேரிக்கு விமானத்தில் வந்தார்.
புதுச்சேரி விமான நிலைய வளாகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் பாஜகவினர் வரவேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சருடன் ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக என்ஐடி இயக்குனர் சங்கரநாராயணசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதனால் ஹெலிகாப்டரில் மத்திய அமைச்சருடன் முதல்வர், ஆளுநர் ஆகியோர் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்கால் என்பதால் அவர் ஏற்கெனவே அங்கு இருந்தார்.
இச்சூழலில் காரைக்கால் செல்ல புதுச்சேரி விமான நிலையத்தில் தயாராக இருந்த ஹெலிகாப்டரில் மத்திய அமைச்சர் உள்ளிட்ட 4 பேர் செல்வதாக இருந்தது. அப்போது, " தனக்கு குறிப்பிட்ட சில முக்கியமான வேலைகள் இருப்பதாகவும் தங்களுடன் நான் அவசியம் வர வேண்டுமா? என மத்திய அமைச்சரிடம், கிரண்பேடி கேட்டார். அதற்கு, "வேண்டாம்" என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இதையடுத்து ஆளுநர் கிரண்பேடி, காரைக்கால் விழாவுக்குச் செல்லாமல் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டு ராஜ்நிவாஸ் சென்றடைந்தார். விழா அழைப்பிதழில் ஆளுநர் கிரண்பேடி பெயர் இருந்தும், மத்திய அமைச்சர் விழாவுக்குச் செல்லவில்லை.
வரவேண்டுமா, கிரண்பேடி, நிதின் கட்கரி, மறுத்த மத்திய அமைச்சர், துணைநிலை ஆளுநர், நாராயணசாமி, பட்டமளிப்பு விழா, தேசிய தொழில்நுட்பக் கழகம், கல்வி அமைச்சர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT