Published : 26 Feb 2020 07:49 AM
Last Updated : 26 Feb 2020 07:49 AM
தமிழகத்தில் 6 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவைக்கு 3 கட்டங்களாக, 17 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 55 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, மார்ச் மாதம் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து, அதற்கான அறிவிப் பையும் வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டி ராவில் 7 இடங்களுக்கும் தமிழ கத்தில் 6 இடங்களுக்கும் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மேற்கு வங்கம், பிஹார்மாநிலங்களில் தலா 5 இடங் களுக்கும் ஒடிசா, ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும் அசாம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும் தெலங்கானா, சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங் களில் தலா 2 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயாவில் தலா 1 இடங்கள் உட்பட மொத்தம் 55 இடங்கள் காலியாகின்றன. இந்த இடங்கள் அனைத்துக்கும் ஒரே நாளில், அதாவது மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய செயலர் பிரமோத்குமார் சர்மா வெளியிட்ட அறிவிப்பு:
இந்த தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 6-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மார்ச் 16-ம் தேதி பரிசீலிக்கப்படும். மார்ச் 18-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், தகுதியானவர்களை தேர்வு செய்ய மார்ச் 26-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் தொடர் பான நடவடிக்கைகள் மார்ச் 30-ம் தேதி நிறைவு பெறும். மேலும், தேர்தலின்போது ஆணையம் வழங்கும் வாக்குச்சீட்டில், தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கும் வயலட் நிற ஸ்கெட்ச் பேனா மூலம் வாக்களிக்க வேண்டும். வேறு எந்த பேனாவையும் பயன்படுத்தக் கூடாது. தேர்தலை வெளிப்படையாக நடத்த, தேர்தல் தொடர்பான பார்வையாளர் களையும் ஆணையம் நியமிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 இடங்கள்
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவைச் சேர்ந்த சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேaின் பதவிக்காலம் வரும் மார்ச் 2-ம் தேதி முடிவடைகிறது.
இதன்மூலம் மாநிலங் களவையில் அதிமுகவின் பலம் 6 ஆகவும் திமுகவின் பலம் 4 ஆகவும் குறைகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் இருந்த ஒரு உறுப்பினரும் ஓய்வு பெறுகிறார்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் 34 பேர் தேர்வு செய்வார்கள் என்பதால், தமிழக சட்டப்பேரவையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில், அதிமுகவுக்கு 3 இடங்களும் திமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும். எனவே இருகட்சிகளிலும் மாநிலங்களவை இடங்களை பிடிக்க, இப்போதே கட்சிகளின் தலைமையை முன்னாள் எம்பி.க்கள், புதியவர்கள் பலர் நாடி வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT