Published : 06 Aug 2015 08:01 AM
Last Updated : 06 Aug 2015 08:01 AM
மது ஒழிப்புப் போராட்டத்தில் கைதானவர்களை திருச்சி மத்திய சிறையில் திருட்டு, அடிதடி வழக்கு குற்றவாளிகளுக்கு அருகிலுள்ள அறைகளில் அடைத்து வைத்துள்ள தற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி அரசியல் கட்சியி னர், சமூக அமைப்புகள், மாணவர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி திருச்சி பகுதிகளில் முன்னெச் சரிக்கையாக கைது செய்யப் பட்ட, போராட்டத்தில் பங்கேற்று கைதான 305 பேர் திருச்சி மத்திய சிறையின் உள்பகுதியில் 4 அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக இதுபோன்ற போராட்டங்களில் கைதாகும் அரசியல் கைதிகளை சிறைக்குள் அடைக்காமல், வெளிப்பகுதியில் உள்ள முகாம் சிறையில் தங்க வைப்பது வழக்கம்.
திருச்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் திருமாவளவன் கூறும்போது, “அரசியல் கைதிகளை முகாம் சிறையில் அடைக்காமல் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் சேர்த்து அடைத்துள்ளனர். சிறை யில் உள்ள நபர்களை இன்று சந்தித்து பேசியபோது, இதுபற்றி கூறி வருத்தப்பட்டனர்.
சாப்பாடு சரியில்லை, படுத்து தூங்குவதற்குக்கூட போதிய இடமில்லை, குற்ற வழக்கு கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று கழிப்பிடம் மற்றும் குளிக்கச் செல்ல வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டனர். எனவே மது ஒழிப்பு போராட்டத்துக்காகக் கைதானவர் களை உடனடியாக முகாம் சிறைக்கு மாற்ற அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தி, அதன்படி செயல் பட உள்ளோம்” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் கேட்டபோது, “இதற்கு முன் அரசி யல் போராட்டங்களில் கைதாகும் நபர்களை முகாம் சிறையில் அடைத்து வந்தது உண்மை தான்.
ஆனால், தற்போது சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை காவலர்கள் அங்கு தங்கியுள்ளனர். எனவே, போராட்டத்தில் கைதான வர்களை, சிறை உள்பகுதியில் காலியாக இருந்த அறைகளில் அடைத்துள்ளோம். அதே கட்டி டங்களில் உள்ள வேறு அறைகளில் தான் குற்ற வழக்குகளில் தொடர் புடையவர்கள் அடைக்கப்பட்டுள் ளனர்.
அரசியல் கைதிகளுக்கு தேவையான மருந்துகள், மாத் திரைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT