Last Updated : 06 Aug, 2015 08:08 AM

 

Published : 06 Aug 2015 08:08 AM
Last Updated : 06 Aug 2015 08:08 AM

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்குள் 7-வது நாளாக போராடும் சசிபெருமாள் உடல்: நோட்டீஸ் அனுப்பிய பிறகு அரசே எரியூட்ட முடிவு

பூரண மதுவிலக்குக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் சசிபெருமாளின் உடல் 7-வது நாளாக போராடி வருகிறது. உடலை பெறுமாறு உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அதன் பிறகும் பெறா விட்டால் அரசு சார்பில் எரியூட்டவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மார்த்தாண்டம் அருகே, உண்ணாமலைக்கடையில் டாஸ் மாக் கடையை அகற்றக் கோரி கடந்த 31-ம் தேதி செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியபோது காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்தார்.

அவரது உடல் கன்னியா குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்ற மாவட்ட நிர் வாகத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் சசிபெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற் காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு வந்த வண்ணம் உள் ளனர். அதேவேளை மருத்துவ மனைப் பிணவறையில் சசிபெரு மாளின் உடலை பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்றுடன் 7 நாட்களாக போலீஸார் அப்பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பிரமுகர்கள் வரும் போது பிரீசரில் இருந்து அவரது உடலை எடுத்து, மீண்டும் உள்ளே வைப்பதால் உடல் பதப்படுத்தலில் சிரமம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப் பதற்காக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

சசிபெருமாளின் உடலை பெறு மாறு, அவரது உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சட்டபூர்வ நட வடிக்கையில் இறங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி வட்டாரத்தினர் கூறியதாவது:

கடந்த 31-ம் தேதியில் இருந்து இன்று வரை சசிபெருமாளின் உடல் தீவிர பாதுகாப்பில் உள்ளது. வழக்கமாக அடையாளம் தெரியாத உடல்களை ஒரு மாதம் வரை வைத்திருப்போம். பிற உடல்களை ஒரு வாரத்தில் உறவினர்களிடம் ஒப்படைத்து விடுவோம்.

சசிபெருமாளின் உடலை முக் கிய பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக பிரீசரில் இருந்து எடுப்பதால் அவரது உடல் கெட்டுப்போகும் நிலையில் உள்ளது. தொடர்ந்து சசிபெருமா ளின் சகோதரர் மற்றும் உறவினர் களிடம் பேசியபோது முதல்கட்ட மாக கன்னியாகுமரி, சேலம் மாவட்டத்திலாவது மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே அவ ரது உடலை வாங்குவதாக கூறி வருகின்றனர். இதனால் சட்டப்படி சசிபெருமாளின் மனைவி, மகன் களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது உடலை ஒப்படைக்க முடிவெடுத் துள்ளோம்.

அதன்பின்பும் அவர்கள் மறுத் தால் மீண்டும் ஒரு முறை நோட்டீஸ் அனுப்பப்படும். பின்னர் அரசின் ஆலோசனைகள் கேட்டு எரியூட்ட ஏற்பாடு செய்யப்படும், என்றனர்.

சசிபெருமாள் மரணத்துக்குப் பின்பு தமிழகம் முழுவதும் மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவரது உடலை ஒப்படைப்பது தொடர்பான குழப்பங்கள் நீடித்து வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x