Published : 13 Feb 2020 05:57 PM
Last Updated : 13 Feb 2020 05:57 PM
சட்டப்பேரவையின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அதிமுக மனு அளித்துள்ளது.
புதுச்சேரி மாநில சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான்குமார், அரசு கொறடா அனந்தராமனுடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டார். இந்தப் புகைப்படம் வைரலாகப் பரவியது.
இதையடுத்து ஜான்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அன்பழகன் இன்று புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், சட்டப்பேரவையின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை நடத்தை விதிகள் 288, 290 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT