Published : 13 Feb 2020 04:38 PM
Last Updated : 13 Feb 2020 04:38 PM
புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது அமைச்சர்கள், அரசு கொறடா உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை சுமத்திப் பேசியிருந்தனர். இதற்கு, "ஆச்சரியமே இல்லை, சொற்கள் மட்டுமே மாறுகின்றன" என்று எமோஜி படத்துடன் கிரண்பேடி கிண்டல் அடித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று (பிப்.12) நடைபெற்றது. அக்கூட்டத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடு தொடர்பாக அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோர் பேசினர். இம்முறை கிரண்பேடி மீது நேரடியாக முக்கியக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.
சாதாரணக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முக்கியக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இம்முறை பதில் தரவில்லை. அதேநேரத்தில் இன்று (பிப்.13) வெளியிட்ட வாட்ஸ் அப் பதிவில் சிரித்தபடி இருக்கும் எமோஜி புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
அதன் விவரம்:
"பொதுவாக என் மீதும், ஆளுநர் அலுவலகம் மீதும் கூறப்படும் பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனக்கு ஆச்சரியமே இல்லை. சொற்கள் மட்டுமே மாறுகின்றன. இன்னும் சில சொற்கள் மீதமிருக்கும் என்றும் நம்புகிறேன். இது மீண்டும் மீண்டும் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாகக் கடனைத் தடுப்பது, ரவுடியிசம், நில அபகரிப்பு, பதிவாளர் சட்ட விதிகளை மீறி கூட்டுறவுச் சங்கங்களை நடத்துதல் போன்ற பல விஷயங்கள் உள்ளன. இச்சட்ட விதிகளைத் தளர்த்துவது எளிதானது. இதனால் பல நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால், இது நீண்ட காலத்துக்குத் தீங்கைத்தான் தரும்.
குறுகிய கால ஆதாயத்தைப் பார்த்தால் கண்டிப்பாக சட்ட விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். நிதி விஷயத்தில் விதிகளை மீறுவது அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் பாதிப்பைத் தரும். சட்ட விதிகளை உறுதி செய்யவே சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், என்னைப் போல எளிதான வழிகள் மற்றும் குறுகிய நலன்களுக்காக இங்கு இல்லை. சரியான செயல்முறைக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவதுடன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவது மிகப்பெரிய நன்மைக்காகத்தான்" என்று கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.
தவறவிடாதீர்!
திரைப்பட நடிகர் எனும் புகழால் ஏற்படும் ஈகோவைக் கொல்லவே நாடகங்களைத் தேடிப் பார்க்கிறேன்: நாசர்
இளைஞர் கொலை வழக்கு: தந்தை, தாய், சகோதரர் உள்பட 4 பேர் கைது
பெரியகுளத்தில் ரசாயன கலப்பில்லாமல் நெல் சாகுபடி: அறுவடைக்கு முன்பே விலை நிர்ணயமான சுவாரஸ்யம்
கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்: பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT