Published : 09 Feb 2020 12:46 PM
Last Updated : 09 Feb 2020 12:46 PM
இந்து மதப் பாதுகாவலர் என்று கூற பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி சாடினார்.
ராமநாதபுரம் சந்தைத் திடலில் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கனிமொழி இவ்வாறு தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது:
பெரும்பான்மையான இந்துக்களுக்கு இந்த பாஜக ஆட்சி என்ன செய்தது? வேலையில்லாத் திண்டாட்டம், இருக்கக் கூடிய வேலைகளும் இல்லை, விவசாயிகளின் தற்கொலை, இதைத் தவிர இந்த ஆட்சி இந்த நாட்டிலே இருக்கக் கூடிய பெரும்பான்மை இந்துக்களுக்கு இதைத்தவிர வேறு எதையும் பரிசாகத் தரவில்லை.
பெரும்பான்மை இந்துக்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாது வெளியிலே நிறுத்தப்படுகிறார்கள் என்று அவர்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம்.
நீங்கள் இந்துப் பாதுகாவலர் என்று தயவு செய்து நீங்களே தவறாக நினைச்சுக்காதீங்க, ஏன்னா இங்க இருக்கக் கூடிய இந்து மதத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய தகுதியோ அறிவோ உங்களுக்குக் கிடையாது, என்று பேசினார் கனிமொழி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT