Published : 10 May 2014 09:20 AM
Last Updated : 10 May 2014 09:20 AM
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பல்வேறு தலைவர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது:
ராமதாஸ் (பாமக நிறுவனர்)
வீரத்தை வெளிப்படுத்துவதற் கான வாய்ப்பாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளால் காளைகளுக்கோ அல்லது அவற்றை அடக்க முயலும் காளையருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், ஜல்லிக் கட்டுக்கு எதிரான சில குற்றச் சாட்டுகளை மட்டுமே மேலோட்ட மாகப் பார்த்துவிட்டு அப்போட் டிக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித் திருப்பது ஏமாற்றத்தை அளிக் கிறது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இல்லாத பொங்கல் திருநாளை நினைத்துப் பார்க்கவே முடியாது. சிலர் உச்சநீதிமன்றத் தடையை மீறி போட்டிகளை நடத்தலாம் என்கிறார்கள். இதனால் விரும் பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜல்லிக் கட்டு போட்டிகளை முழுமையான கண்காணிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் ஏற்கத்தகுந்தது அல்ல. மேலை நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் ஈடுபடும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு எந்தவித துன்பமும் இழைப்பதில்லை. தமிழர் நாகரிகத்தின் மீது தொடுக்கப்பட்ட அத்துமீறலாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இராம கோபாலன் (இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர்)
ஜல்லிக்கட்டு என்பது திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடத்திற்கு ஓரிரு முறைகள் நடத்தப்படும் போட்டியாகும். ஆனால் பணம் கட்டி சூதாட்டமாக குதிரைப் பந்தயம் நடத்தப்படுகிறது. இதில் குதிரைகள் துன்புறுத்தப்படுகின்றன. அவற்றை ஏன் தடை செய்ய முன்வரவில்லை?
தினமும் லாரிகளில் ஆயிரக்கணக்கான அடிமாடுகளை ஏற்றிச் சென்று மாமிசத்திற்காக வெட்டுவதற்கு எதிராக பிராணிகள் வதைச் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை. தமிழக பாரம்பரியத்திற்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க தகுந்த வழிமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT