Published : 08 Feb 2020 04:49 PM
Last Updated : 08 Feb 2020 04:49 PM
இப்போதைக்கு கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று மதுரையில் முன்னாள் தலைமைச் செயலாளர் பா.ராமமோகன ராவ் தெரிவித்தார்.
மன்னர் திருமலை நாயக்கரின் 437-வது பிறந்த நாள் விழா இன்று (பிப்.8-ம் தேதி) மதுரையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னாள் தலைமைச் செயலர் பா.ராமமோகன ராவ் முன்னின்று நடத்தினார்.
விழாவையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாயுடு, நாயக்கர் தெலுங்கு மக்களை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாகவும், கலாச்சார பண்பாட்டு இயக்கமாக உருவாக்க உள்ளேன். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை.
நல்நோக்கத்திற்காக இதை கலாச்சார பண்பாட்டு இயக்கமாக உருவாக்க உள்ளேன். இன்னும் ஆழமாகச் சொல்வதென்றால் இது ஒரு விழிப்புணர்வு இயக்கம். அரசியல் அடுத்த கட்டமே. அதுவரை தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நல்லது செய்தவர்களுக்கு பண்பாட்டு ரீதியில் விழா கொண்டாடப்படும்.
ஜெயலலிதா எனக்கு வேண்டியவர் மற்றபடி தற்போது தமிழகத்தில் எப்படி ஆட்சி நடைபெறுகிறது என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை.
இப்போதைக்கு கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. என்னுடைய திட்டம் சமுதாயப்பணி நோக்கியது.
தமிழகம் என்னுடைய கர்மபூமி. ஆந்திரா என்னுடைய ஜென்மபூமி. தமிழகத்தில் சமுதாயப்பணியை உயிர் உள்ளவரை தொடர்வேன். தேசிய அரசியல் என் நோக்கம் அல்ல. தமிழகத்தில் சமுதாயப்பணியை மட்டுமே செய்வேன். தமிழகம் தான் என்னை வாழ வைத்த பூமி" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT