Last Updated : 08 Feb, 2020 11:56 AM

 

Published : 08 Feb 2020 11:56 AM
Last Updated : 08 Feb 2020 11:56 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்: குலதெய்வம் கோயிலிலும் திடீர் வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தார்.

இதற்காக இன்று காலை 7 மணிக்கு துணை முதல்வர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்தார். அவரை நிர்வாக அதிகாரி இளங்கோவன் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். ஆண்டாள் கோயிலில் காலை விஸ்வரூப தரிசனம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற முதல் காலை பூஜையில் பங்கேற்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் பிறந்த நந்தவனம் சக்கரத்தாழ்வார் சன்னதி பெரிய பெருமாள் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்தார்.

கோயிலுக்குள் வரும்போது ஆண்டாள் கோவில் நுழைவு வாயிலில் இருந்த கோயில் யானை ஜெயமால்யதாவிற்கு பழங்கள் கொடுத்தார்.

ஆண்டாள் கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள அவரது குல தெய்வமான பேச்சியம்மனை வழிபடச் சென்றார் பின்னர் அங்கு சென்று பேச்சியம்மனை வழிபட்டார்.

'வேதம் எளிதல்ல..'

ஆண்டாள் கோயில் தரிசனம், குல தெய்வம் கோயிலில் வழிபாடு ஆகியனவற்றை முடித்துக் கொண்டு ராஜபாளையம் சென்றார்.

அங்கு ராம்கோ நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டடுள்ள ஸ்ரீ சிருங்கேரி சாராதம்பாள் கோயிலில் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹான் சுவாமிகளின் 70-வது வர்தந்தி மஹோத்ஸவம் தினம் (பிறந்த நாள்) முன்னிட்டு வேதம் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

அதில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ராம்கோ சேர்மன்.வெங்கட்ராம ராஜா ஆகியோர் கலந்து கொன்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய துணை முதல்வர், "இந்து மதத்தின் அடிப்படை வேதம். அது தெய்வீகம் நிறைந்தது. வேதம் கடல் போன்றது. அதைக் கற்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது ஒரு கலை. கற்கும் வேதத்தை சிரத்தையுடன் கற்று பாதுகாக்க வேண்டும் எனப் பேசினார்.

பின்னர், சம்ஸ்கிருத மொழியில் அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்ற மாணவனைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்கினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x