Published : 13 May 2014 01:49 PM
Last Updated : 13 May 2014 01:49 PM
தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர்கள் இருவரை கைது செய்ய, இன்டர்போல் காவல்துறையின் உதவியை இலங்கை அரசு நாடுகிறது.
கடந்த மே 5-ல் இலங்கை முல்லைத்தீவு பகுதியிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு 2 தனித்தனிப் படகுகளில் இரண்டு குடும்பங்களைச் சார்ந்த 5 சிறுவர்கள் உள்பட 10 பேர் அகதிகளாக வந்தனர்.
''இலங்கை ராணுவத்தினரால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் உயிர்ப் பிழைப்பதற்காகவே அகதிகளாக ராமேஸ்வரம் வந்தோம்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, அகதிகளாக வந்த கதிரவேலு தயாபரராஜா மற்றும் அவரது உதயகலா ஆகிய இருவர் மீது பல்வேறு பண மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு யாழ்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் சாவகச்சேரி ஆகிய நீதிமன்றங்களில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடி வந்துள்ளனர்.
தற்போது, இந்த தம்பதியர் தஞ்சம் கோரி தமிழகத்திற்கு வந்துள்ள செய்தி, இலங்கையிலுள்ள ஊடகங்களில் படத்துடன் வெளியாகின. இதனைப் பார்த்த இந்தத் தம்பதியினரால் பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சாவகச்சேரி நீதி அறிக்கை தாக்கல் செய்து தயாபரராஜா, உதயகலா தம்பதியினரை தம்பதியரை இன்டர்போல் காவல்துறையின் உதவியுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT