Published : 05 Feb 2020 12:30 PM
Last Updated : 05 Feb 2020 12:30 PM
வருமான வரித்துறை சர்ச்சை தொடர்பாகப் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ரஜினி பதிலளித்துள்ளார்.
2002-2003 மற்றும் 2004-2005 நிதியாண்டுகளில் தனது வருமானம் பற்றிய விவரங்களை மறைத்ததாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான விசாரணையை வருமான வரித்துறை திரும்பப் பெற்றுள்ளது. இதில் தான் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்திருப்பதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. சமூக வலைதளத்தில் பலரும் #கந்துவட்டிரஜினி என்ற ஹேஷ்டேகை உருவாக்கி, அதில் ரஜினியைக் கடுமையாகச் சாடி வந்தார்கள். மேலும், இது தொடர்பாக அவருடைய கணக்காளர் உள்ளிட்டோர் என்ன கூறினார்கள் உள்ளிட்ட விவரங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
இதனிடையே இன்று (பிப்ரவரி 5) காலை ரஜினி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது, வருமான வரித்துறை விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி, "நான் நேர்மையான முறையில் வருமான வரி செலுத்தி வருகிறேன். அது வருமான வரித்துறைக்கே தெரியும். நான் சட்ட விரோதமாக எந்தவொரு காரியமும் செய்யவில்லை. அதை நீங்கள் எந்தவொரு ஆடிட்டரிடம் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம்" என்று பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT