Published : 04 Feb 2020 07:46 PM
Last Updated : 04 Feb 2020 07:46 PM
மதுரை வரும் சுற்றுலாப்பயணிகள் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கவும், சாப்பிடவும் தமிழகத்திலேயே முதல் முறையாக தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்தி, அவர்களுக்குக் கடைகள் கட்டிக் கொடுத்து ஒருங்கிணைந்த உணவு - வணிக வளாகம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் தமிழக அரசு தேசிய நகர்புற வாழ்வாதாரத் திட்டத்தில் தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் முக்கிய நகரங்களில் சுற்றுலாப்பயணிகளைக் கவரவும், அவர்கள் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களை வாங்கவும், சாப்பிடவும் சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு அதே பகுதியில் ஓரிடத்தில் கடைகள் அமைத்துக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்திலே முதல் முறையாக இந்த திட்டத்தில் சென்னை, மதுரை மாநகராட்சிகள் தேர்வு, அங்கு இந்த ஒருங்கிணைந்த தெருவோர உணவு வணிக வளாகம் அமைக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் இந்தத் திட்டத்தில் 100 வார்டுகளிலும் உள்ள டீ கடைகள், தெருவோர தள்ளுவண்டி கடைகள், பூக்கடைகள், காய்கறி கடைகள், உள்ளிட்டவற்றை கணக்கெடுத்து, அவர்களை இந்த திட்டத்தில் சேர்க்க அடையாள அட்டைகளை வழங்கியது. தற்போது அந்த வியாபாரிகள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கேயே அவர்களுக்கு ஒரு சிறியபகுதியில் ஒருங்கிணைந்த தெருவோர உணவு வணிக வளாகம் அமைத்துக் கொடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
டவுன் ஹால் ரோடு, வடக்கு சித்திரை வீதி, தளவாய் தெரு, டிபிகே ரோடு ஆகிய நான்கு இடங்களில் இந்த தெருவியாபாரிகளுக்கான ஒருங்கிணைந்த தெருவோர உணவு - வணிக வளாகம் அமைக்கப்படுகிறது.
அந்த இடத்தில் காய்கறிகள், பூக்கடைகள், பழக்கடைகள், டீ கடைகள் அமைக்கப்பட்டு அந்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அங்கு தரமான பொருட்களும், உணவும் வழங்க மாநகராட்சி அவர்களை கண்காணிக்கும்.
அதனால், மதுரையில் சுற்றுலா வளர்ச்சிப்பெறும். தற்போது முதற்கட்டமாக இந்த திட்டத்திற்கு ரூ.5 கோடியே 4 லட்தச்து 14 ஆயிரத்து 5 ஆயிரம் நிதி ஒதுக்கீடு கேட்டு மாநகராட்சி தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் இந்தத் திட்டத்தில் மெரினா கடற்கரை சேர்க்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT