Published : 19 May 2014 08:00 PM
Last Updated : 19 May 2014 08:00 PM
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிர மாநிலத்தில் ரேக்ளா போட்டி உள்பட காளைகளை வைத்து நாடு முழுவதும் நடத்தப் படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி களுக்கு முழுமையாக தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழகத்தின் பண்பாடு, பாரம் பரியம், கலாச்சாரத்துடன் தொடர் புடையது. அதை விளையாட்டு நிகழ்ச்சியாகவோ, பொழுது போக்கு நிகழ்ச்சியாகவோ கருத முடியாது. இந்நிகழ்ச்சியில் காளைகள் கொடுமைப்படுத்தப் படுவது இல்லை.
மற்ற நாடுகளில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. அதுபோன்ற எதுவும் தமிழகத்தில் நடப்பதில்லை. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கட்டுப்படுத்தலாம். முழுமையாக தடை விதிக்கக் கூடாது. எனவே, தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதை எதிர்த் தும், அதற்கு விதிமுறைகளை வகுத்து 2009-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்தும் விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தபோது, “ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் தேவையற்ற முறையில் துன்புறுத்தப்படுகின்றன. மிருக வதை தடைச் சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்துவது குற்றம்; காட்டுமிராண்டித்தனம்” என்று விலங்குகள் நல வாரியம் வாதிட்டது.
இந்த வழக்கை விசாரித்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திரகோஸ் அடங்கிய அமர்வு கடந்த 7-ம் அளித்த தீர்ப்பில், மாடுகளின் உரிமையா ளர்கள் மாடுகளை மனிதர்களுடன் சண்டை போடவோ, இதர விலங்கு களுடன் சண்டை போடவோ தூண்டக் கூடாது. ஒவ்வொரு ஜீவராசியும் சுதந்திர மாக வாழ உரிமை உண்டு. மற்ற நாடுகளில் இந்த சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அரசியல் சாசன உரிமையாக கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். எந்த விலங்கும் துன்புறுத்தப்படாமல் இருப்பதை விலங்குகள் நல வாரியம் கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகள் சட்டம், மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்தை மீறுவ தால், தமிழக அரசின் சட்டமும் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந் தனர். இப்போது அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT