Published : 02 Feb 2020 06:51 AM
Last Updated : 02 Feb 2020 06:51 AM

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட குமரகுரு எம்எல்ஏ 5.5 ஏக்கர் நிலம் தானம்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தேவஸ்தான நிர்வாகிகளிடம் வழங்கினார்

உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக குமரகுரு எம்எல்ஏ தானமாக அளித்த 5.5 ஏக்கர் நிலப் பத்திரத்தை முதல்வர் பழனிசாமி திருமலை தேவஸ்தான நிர்வாகிகளிடம் வழங்கினார்.

திருமலை

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட எம்எல்ஏ குமரகுரு தனது 5.5 ஏக்கர் நிலத்தை முதல்வர் பழனிசாமி முன்னிலையில் திருப்பதி கோயிலுக்கு தானமாக வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்று முன் தினம் மாலை, தமிழக முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள், அவர் தங்கு வதற்கு விடுதி ஏற்பாடு செய்தனர்.

இரவு தேவஸ்தான விடுதியில் தங்கிய முதல்வர், நேற்று காலை விஐபி பிரேக் சமயத்தில் கோயிலுக்குச் சென்று ஏழுமலை யானை வழிப்பட்டார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, தரிசன ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

இதைத் தொடர்ந்து ரங்கநாயக மண்டபத்தில் முதல்வர் மற்றும் அவரது துணைவியாருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர், ரதசப்தமியையொட்டி, நேற்று காலை 5.30 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள வாகன மண்டபத்திலிருந்து சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளினார். இதில் முதல்வர் பழனிசாமி குடும்பத்தினர் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.

அப்போது, உளுந்தூர்பேட்டை சட்டப்பே ரவை உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு, தனக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தை திருப்பதி கோயிலுக்கு தானமாக வழங்கினார். இதற்கான பத்திரத்தை முதல்வர் பழனிசாமி மூலமாக குமரகுரு வழங்கினார்.

விரைவில் பணிகள் தொடங்கும்

பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தி யாளர்களிடம் பேசும்போது, “உளுந்தூர் பேட்டையில் ஏழுமலையான் கோயில் விரை வில் கட்டப்படும். இதற்காக சட்டப் பேரவை உறுப்பினர் குமரகுரு தனக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கினார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப் படும்” என்றார்.

பின்னர் முதல்வர், சேலம் நோக்கி காரில் புறப்பட்டு சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x